• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

by Tamil2daynews
November 29, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

 

கேரளாவைச் சேர்ந்த முன்னணி ஓடிடி தளமான மனோரமாமேக்ஸ், தமிழ் ரசிகர்களைக் கவரும் வகையில் தனது மலையாளத் திரைப்படங்களை தமிழ் மொழியில் வெளியிட்டு வருகிறது. நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்‌ஷன், த்ரில்லர் எனப் பல்வேறு ஜானர்களில் உள்ள திரைப்படங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டு, மலையாளத் திரையுலகின் சிறந்த படைப்புகளைத் தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கிறது.

தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் தமிழில் பார்க்கக் கிடைக்கும் மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’, ‘தி தர்ட் மர்டர்’, ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’, ‘கட்டாலன்’ மற்றும் ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் ’Her’ திரைப்படம் இந்த வார இறுதியில் தமிழில் வெளியாகவுள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களையும், சிறந்த நடிகர்களையும் கொண்ட இந்தப் படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான திரையனுபவத்தை வழங்குகின்றன.  ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’ ஆகிய படங்கள் நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான கதையையும் கொண்டிருக்க, ‘தி தர்ட் மர்டர்’ திரைப்படம் பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தைத் தருகிறது. ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’ நகைச்சுவை விருந்தாக அமைய, ‘கட்டாலன்’ ஆக்‌ஷன் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட நகைச்சுவை கலந்த த்ரில்லர் அனுபவத்தை ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ தருகிறது. இந்த வரிசையில் புதிதாக இணையவுள்ள ‘Her’ திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20,000 மணி நேரத்திற்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள மனோரமாமேக்ஸ் தளத்தில், திரைப்படங்கள் மட்டுமின்றி மழவில் மனோரமா மற்றும் மனோரமா நியூஸ் தொலைக்காட்சிகளின் பிரபல நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம். பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம், மொழி வேறுபாடுகளைக் கடந்து தரமான பொழுதுபோக்கை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்ப்பதில் இத்தளம் கவனம் செலுத்தி வருகிறது.

தமிழில் மலையாளத் திரைப்படங்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வரும் மனோரமாமேக்ஸ், புதிய திரைப்படங்களையும் பல்வேறு ஜானர்களிலான படைப்புகளையும் தனது தளத்தில் இணைத்து, தமிழ் ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அனுபவத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

Previous Post

*மூன்வாக் டிரெய்லர் வெளியானது! டிசம்பர் 24 வெளியீட்டை முன்னிட்டு தொடங்கியது சிரிப்பு சரவெடி!*

Next Post

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

Next Post

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: 'ஆபரேஷன் சிந்தூர்' பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’

November 29, 2026

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

November 29, 2026

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

November 29, 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

November 29, 2026

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

November 29, 2026

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

November 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.