• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

முற்றிலும் புதிய அறிமுகத்தில் துருவ் விக்ரம்..!

by Tamil2daynews
February 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Dhruv Vikram's Unseen Pictures From The Sets Of Mahaan Will Make You Go Weak In The Knees!

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.  இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம்  முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும்  ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
Watch: Dhruv Vikram's first-look as Dada from Mahaan is out | The News Minute
மகான் = தனக்கென சில இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு தனிமனித சுதந்திரத்துடன் லட்சிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதன்போது அவரது குடும்பத்தை விட்டு அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. கோடீஸ்வரனாக வேண்டும் என்ற தனது கனவு நனவான பிறகு, தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள வாரிசு இல்லையே..! என்ற இழப்பை உணர்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நல்லதொரு தந்தையாக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாரா.. என்பதை பரபரப்பான அதிரடி மிகுந்த படைப்பாக ‘மகான்’ உருவாகியிருக்கிறது. எதிர்பாராத தொடர் நிகழ்வுகளின் வழியாக நாயகனது வாழ்க்கை எப்படி பயணிக்கிறது என்பதை ஆக்சன் திரில்லருடன் விவரிக்கிறது ‘மகான்’ படத்தின் திரைக்கதை.
Previous Post

அமேசான் பிரைமில் திரைக்காதலர்கள் மற்றும் ஆக்சன் திரில்லர் ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்” திரைப்படம் !

Next Post

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது !

Next Post

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று இனிதே துவங்கியது !

Popular News

  • “இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் கொண்டாடத் தயாராகுங்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்களை மகிழ்விக்க வரும் “லைகர்” நடிகர் விஷ் ..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நயன்தாராவின் பெயரில் ஒரு மிரட்டலான பேய் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

July 20, 2026

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

July 20, 2026

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

July 20, 2026

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

July 20, 2026

உலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்

July 20, 2026

“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

July 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.