ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமேசான் பிரைமில் திரைக்காதலர்கள் மற்றும் ஆக்சன் திரில்லர் ரசிகர்களை அசத்த வருகிறது, சீயான் விக்ரம் நடிப்பில் “மகான்” திரைப்படம் !

by Tamil2daynews
February 10, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

 

ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் மற்றும் ஆர்வமிகு திரைப்பட காதலர்கள், இனி  அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில் ப்ரைம் வீடியோ, மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, சீயான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தை பிப்ரவரி 10 ஆம் தேதி திரையிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் ‘மகான்’, கன்னடத்தில் ‘மஹா புருஷா’ என்ற பெயரில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு முன்னதாகவே எதிர்பார்ப்புகள்  உச்சத்தில் இருக்கும் நிலையில், திரைப்படக் காதலர்கள் வெகுஜன ரசிகர்கள் ஆகியோருக்கு, இந்தப்படம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தரும் என்பதற்கான முக்கிய அம்சங்கள் உங்களுக்காக இங்கே..

நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 60 வது படம் :
திரையுலகில் பல சிறந்த கதைகளை உருவாக்கியதற்காக புகழ் பெற்ற  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘மகான்’ திரைப்படம் முன்னணி நடிகர் சீயான் விக்ரமின் 60வது படமாகும். இந்த காரணம் நீங்கள் உற்சாகமடைய போதுமானதாக  இல்லை எனில் இதோ அடுத்தது.. நிஜ வாழ்க்கையில் அப்பா-மகன்  இரட்டையர்களான சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர், ரீல்-லைஃப் அப்பா மகனாக முதல் முறையாக இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்பது இப்படத்தின் முக்கிய சிறப்பம்சம் ஆகும்.
ஒரு அட்டகாசமான எண்டர்டெயினர்:
‘மகான்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோது அதன் உலகின்,  சிறு பார்வையை நமக்கு காட்டியது.  சீயான் விக்ரம் மற்றும் துருவ் ஆகியோர் தங்களின் நேர்த்தியான தோற்றத்தில், கதாப்பாத்திரத்தில் பொருத்தமாகவும், அழகாகவும் இருப்பதைக் காணும் போது நம் அனைவருக்கும் ஒரு விருந்து இருப்பது உறுதியானது. படைப்பாளிகள் வெளியிட்ட  இப்படத்தின்  போஸ்டர்களும் பாடல்களும், படம் எந்தளவுக்கு விறுவிறுப்பாக இருக்கப் போகிறது என்பதை நோக்கிய எதிர்பார்ப்பை மேலும் மேலும்  தூண்டுவதாக அமைந்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசை ஏற்கனவே ரசிகர்களின் பிளேலிஸ்ட்களில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது.
இரண்டு உலகங்களிலும் சிறந்தவை:
ஒரே மாதிரியான பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் இரு திறமைசாலிகள், அழுத்தமான, சக்திவாய்ந்த கதைகளை உருவாக்கும்போது ஒரு சிறந்த படைப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும், அப்படிபட்ட திறமைசாலிகளான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் முன்னணி நடிகர் சீயான் விக்ரம், ஆகிய இருவரும் இணைந்ததன் விளைவு தான் ‘மகான்’ திரைப்படம். கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சீயான் விக்ரம் இணைந்திருப்பது, உலகெங்கிலும் உள்ள திரைப்பட சாதனைகளை பல  முறியடிக்கப்படப்போவதை குறிக்கிறது. மகான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் மற்றும் கன்னடத்தில் மகா புருஷாவாகவும் பிப்ரவரி 10 ஆம் தேதி பிரத்தியேகமாக உலகளவில் பிரைம் வீடியோவில் திரையிடப்படுகிறது.
Tags: AmazonChiyan VikramDhruv Vikramdigital rights to amazon
Previous Post

தயாரிப்பாளர்களின் இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் “ரேஞ்சர்”

Next Post

முற்றிலும் புதிய அறிமுகத்தில் துருவ் விக்ரம்..!

Next Post

முற்றிலும் புதிய அறிமுகத்தில் துருவ் விக்ரம்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விருமன் விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை

August 13, 2022

விருமன் விமர்சனம்

August 13, 2022

கொலை திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

August 13, 2022

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு

August 13, 2022

“முதல் பாகத்தில் ஏமாற்றினார்கள்.. இப்போது திருப்தி” ; ஜீவி-2 நாயகி அஸ்வினி சந்திரசேகர் ஓபன் டாக்

August 13, 2022

SS ராஜமௌலியின் “ஆர்ஆர்ஆர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகீறது!

August 12, 2022
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2022 Tamil2daynews.com.