• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தங்கர்பச்சான் அடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்…

by Tamil2daynews
February 17, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம்.தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய  பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான்.  நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்பொழுது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் அவரது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார்.
முதல் முறையாக தனது பாணியில் இருந்து மாறுபட்டு இப்படத்தை உருவாக்கி வருகிறார். இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்தவர் இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது.  படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளால் முதன் முறையாக வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர் பச்சான்.
“தக்கு முக்கு திக்கு தாளம்                                                                               
போடப்போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
​​​​மாத்தப்போறன்டா! 
சில்லாக்கி பில்லாக்கி சீனாக்குட்டியே
​இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
​என்னக் கட்டிப்புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!..
என்று தங்கர் பச்சான் எழுதிய இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தங்கர் பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள்.  இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக  தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள் . ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவபாஸ்கரன். படத்தொகுப்பு சாபு ஜோசப். கலை சக்தி செல்வராஜ்,நடனம் தினேஷ், சண்டைப்பயிற்சி ஸ்டன்ட் சில்வா கையாள்கின்றனர். பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது.விரைவில் அடுத்தடுத்த பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகும். சம்மர் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார்கள்.
Previous Post

இயக்குனர் அவதாரம் எடுத்த பிருந்தா மாஸ்டர்..!

Next Post

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Next Post

ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” இந்தோனேஷிய பஹாசா மொழியில் உருவாகும் முதல் தமிழ் படம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

Popular News

  • நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டெக்சாஸ் டைகர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு…ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “அங்கீகாரம்” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.