• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

by Tamil2daynews
October 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

 

‘சப்த சாகரதாச்சே எல்லோ’ மற்றும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக்குடன் முதன்முறையாக இணைகிறார். தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் நடிக்கும் இப்படத்தை மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் சிருனி சினி கார்ப்பரேஷன் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்தை சாய் கிருஷ்ணா கட்வால் இணைந்து தயாரிக்கிறார்.

‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ ஆகிய படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ருக்மிணி வசந்த், தற்போது ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தில் ருக்மிணி வசந்துடன் இணைந்து தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோரும்  முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ருக்மிணி வசந்த் மற்றும் ஸ்ரீ கார்த்திக் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்பயணம் எனும் புதுமையான கற்பனை கருவுடன், தாய் – மகன் உறவின் உணர்வுப்பூர்வமான ஆழத்தையும் இணைத்து உருவான ‘கணம்’ திரைப்படத்தை தொடர்ந்து, ஸ்ரீ கார்த்திக் தனது அடுத்த படைப்பின் மூலம் புதிய கதைக்களத்தையும், வித்தியாசமான கலைஞர்களின் கூட்டணியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்தப் படத்தின் அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள படக்குழு, ருக்மிணி வசந்த் ஏற்று நடிக்கும் ‘தாரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் பிரத்யேக அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஸ்ரீ கார்த்திக், தேவ் ராம்நாத் மற்றும் விநாயக் வைத்யநாதன் ஆகியோர் ‘தாரா’ கதாபாத்திரத்திற்கான இறுதி தேர்வில் ஈடுபடுகின்றனர்.

அந்த சூழலில் எதிர்பாராத விதமாக வரும் ஓர் அறிவிப்பு அவர்களை திகைக்க வைக்கிறது. தொடர்ந்து, ருக்மிணி வசந்த் அறிமுகமாகும் காட்சியுடன் வீடியோ நிறைவடைகிறது. இதன் மூலம் படத்தின் உலகம் குறித்த முதல் பார்வையை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறது படக்குழு.

பட அறிவிப்பை வெளியிடுவதிலும் புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ள மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், கடந்த 18 மாதங்களில் எதிர்கொண்ட ஏற்ற தாழ்வுகள், சவால்கள் மற்றும் அனுபவங்களை மையமாக கொண்டு, இன்ஸ்டாகிராமில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்படும் கற்பனை கலந்த ஆவண தொடர் ஒன்றை உருவாக்கியுள்ளது.

இதுவரை ஒன்பது அத்தியாயங்களை கடந்துள்ள இந்த தொடர் நிஜ அனுபவங்களையும் கற்பனை வடிவிலான காட்சிகளையும் இணைத்து, இறுதியில் ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பதை வெளிப்படுத்தியுள்ளது. படைப்பாற்றலுக்கும் வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் முறைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தனித்துவமான முயற்சியாக இது அமைந்துள்ளது.

தேவ் ராம்நாத் மற்றும் ஸ்ரீ கார்த்திக் ஆகியோரால் தொடங்கப்பட்ட மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட், தனது தனித்துவமான படைப்புகளின் மூலம் கவனம் பெற்றுவரும் படைப்பாக்க நிறுவனமாகும். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற தமிழ் இணைய தொடரான ‘ஐ ஹேட் யூ – ஐ லவ் யூ’ மற்றும் விருதுகளை வென்ற குறும்படமான ‘சைல்ட்ஹுட் டைரீஸ்’ ஆகியவை இந்நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

தற்போது திரைப்பட தயாரிப்பு துறையிலும் தனது பயணத்தை விரிவுபடுத்தும் இந்நிறுவனம், புதிய சிந்தனைகளையும் வித்தியாசமான கதை சொல்லல் அணுகுமுறைகளையும் பெரிய திரைக்கு கொண்டுவருகிறது.

தயாரிப்பாளர் ஜஸ்வந்துடன் தொடர்புடைய சிருனி சினி கார்ப்பரேஷன், ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சி லா சோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. அப்படம் சிறந்த அசல் திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. ‘கீதா கோலா’, ‘காந்தா’ ஆகிய படங்களுடன் தொடர்புடைய சாய் கிருஷ்ணா கட்வாலும் இந்தப் படத்தின் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளார்.

ருக்மிணி வசந்த் ‘தாரா’ கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறமையான கலைஞர்களும், புதுமையான சிந்தனைகளை கொண்ட படைப்பு குழுவினரும் இணைந்துள்ள இப்படம், அதன் வித்தியாசமான அணுகுமுறையால் தற்போதே கவனம் ஈர்த்துள்ளது.
Previous Post

ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Next Post

‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

Next Post

‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

Popular News

  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.