• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘அமோர்’ சிங்கிள் ஆல்பம் வெளியீடு

by Tamil2daynews
March 10, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சுயாதீன இசை கலைஞர்கள் பிரணவ் ஆதித்யா மற்றும் சஞ்சய் பிரசாத் ஆகியோரின் இசையில் உருவான ‘அமோர்’ எனும் வீடியோ இசை ஆல்பத்தை திரையிசை உலகின் முன்னணி இசையமைப்பாளர்களான அனிரூத் மற்றும் ஜிப்ரான் இன்று வெளியிட்டனர்.சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ தயாரித்திருக்கும் வீடியோ இசை ஆல்பம் ‘அமோர்’. இந்த வீடியோ இசை ஆல்பத்தில், சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் அனிரூத்துடன் பாடிய இசைக்கலைஞர் ஆதித்யா ஆர். கே. மற்றும் நடிகை ஆலியா ஹயாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் பிரசாத்தின் இளமை ததும்பும் வரிகளை நாயகனாக நடித்திருக்கும் ஆதித்யா ஆர்.கே சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். சங்கர்ராஜா மற்றும் எஸ். நவீன் குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இதனை எஸ் பி என் சத்திய நாராயணன் இயக்கியிருக்கிறார்.

‘அமோர்’ வீடியோ இசை ஆல்பம் குறித்து இயக்குநர் எஸ் பி என். சத்யநாராயணன் பேசுகையில்,

” ‌இளைஞர்களின் கனவு உலகத்தில் எப்பொழுதும் காதல் பற்றிய சிந்தனை சிறகடித்துக் கொண்டே இருக்கும். ‘அமோர்’ என்றால் காதல். இந்த இசை ஆல்பத்தில் காதலன் காதலியை சந்தித்து தன் காதலை ஏற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கிறான். நாயகனின் காதலை ஏற்றுக் கொண்ட காதலி, அவனுடைய நேர்த்தியான நேர்மையால், பேரன்பு கொண்டு, காதலனை தன்னுடைய உடைமையாக கருதுகிறாள். இதனால் காதலர்களிடையே பிரிவு ஏற்படுகிறது. அதன்பின் அவர்கள் காதலின் வலிமையால் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதை இனிமையான இசையின் பின்னணியில், அழகான காட்சிகளின் ஊடே  சொல்லி இருக்கிறோம். காதலைப் பற்றிய எங்களது கற்பனை படைப்பை பார்வையாளர்களிடத்திலும், ரசிகர்களிடத்திலும் சென்றடைய செய்த சரிகம நிறுவனத்தின்  அனந்தராமன் மற்றும் சிவபாலன் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இதனிடையே இந்த வீடியோ இசை ஆல்பத்தை தயாரித்திருக்கும் பி ரெடி பிலிம்ஸ் நிறுவனம், தொடர்ந்து வீடியோ இசை ஆல்பங்களை தயாரித்து வெளியிடுவதிலும், ஆதித்யா ஆர்.கே போன்ற இசை கலைஞர்களையும், பின்னணி பாடகர்களையும் நடிகர்களாக வீடியோ இசை ஆலபத்தில் அறிமுகப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஷ்ரேயாஸ் தல்பேட் நடிக்கும்  ‘கௌன் பிரவின் தம்பே?’ ( KAUN PRAVIN TAMBE? )

Next Post

பேரறிவாளன் விவகாரம் . சீமான் வரவேற்பு..!

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

பேரறிவாளன் விவகாரம் . சீமான் வரவேற்பு..!

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பீப் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.