• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆல்பத்தில் களம் காணும் இசையமைப்பாளர் – சி.சத்யா

by Tamil2daynews
March 16, 2022
in சினிமா செய்திகள்
0
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Image
திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் சி சத்யா, முதன்முறையாக இசை காணொலி ஒன்றை (இண்டிபெண்டென்ட் ஆல்பம்) உருவாக்கியுள்ளார். போகாதே என்று தலைப்பிடப்பட்டுள்ள இதில் அம்மு அபிராமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இயற்கையின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடல் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி அன்பை விதைக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது. 2021-ம் ஆண்டு வெளியான தீதும் நன்றும் திரைப்படத்தை இயக்கிய ராசு ரஞ்சித் போகாதேவை இயக்கியுள்ளார்,
தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியரான லாவரதன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பிரபல இந்தி பாடகரும் சல்மான் கான் நடித்த பாலிவுட் பிளாக்பஸ்டரான ரேஸ் 3-ன் இசையமைப்பாளர்களில் ஒருவருமான ஷிவாய் வியாஸ் இப்பாடலைப் பாடியுள்ளார்.
ஆல்பத்தில் தடம் பதித்திருப்பது குறித்து சத்யா கூறுகையில், “ரசிகர்களின் வேண்டுகோள்களே இதற்குக் காரணம். என்னை ஆல்பம் செய்ய சொல்லி சமூக வலைதளப் பக்கங்களில் அவர்கள் தொடர்ந்து கேட்டு வந்தார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் போகாதே அமைந்துள்ளது,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “போகாதே வை முழுமையாக உருவாக்க எங்களுக்கு ஒரு மாதம் ஆனது. குழுவினர் அனைவரும் சிறந்த உழைப்பை வழங்கியுள்ளனர். பாடல் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. அனைவராலும் இது வரவேற்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
இன்று மார்ச் 16-ம் தேதி அம்மு அபிராமியின் பிறந்தநாளை ஒட்டி தனது யூடியூப் சேனலில் போகாதேவை சத்யா வெளியிட்டுள்ளார். இந்த ஆத்மார்த்தமான பாடல் ரசிகர்களின் இதயங்களை வெல்லும் என்று அவர் கூறினார்.
என்பிகாயின்.காம் (NBICOIN.COM) தளத்தில் இப்பாடல் என் எஃப் டி (NFT) வடிவில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. போகாதேவின் ஒளிப்பதிவை ஏ கே தினேஷ் கையாண்டுள்ளார். வடிவமைப்பு: ஸ்ரீ அரவிந்த் கேசவன். ஸ்பேஸ் புரொடக்ஷன் பேனரில் இந்த ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
Previous Post

ஓ டி டி யில் வரும் விக்ரம் பிரபு படம்..!

Next Post

என் மகனே என் இயக்கத்தில் நடிக்க தயங்கினார்… -தங்கர்பச்சான்..!

Next Post
பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

என் மகனே என் இயக்கத்தில் நடிக்க தயங்கினார்... -தங்கர்பச்சான்..!

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.