• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

இதுதான் திமுக அரசின் சமூக நீதியா..? “நாம் தமிழர்” சீமான் கண்டனம்..!

by Tamil2daynews
March 22, 2022
in அரசியல்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இதுதான் திமுக அரசின் சமூக நீதியா..? “நாம் தமிழர்” சீமான் கண்டனம்..!

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியத் தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகி தம்பி கோவை தம்பி ரகமத்துல்லாஹாவையும், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசியதற்காக அதன் நிர்வாகிகளான, தம்பி ஜமால் உஸ்மானி ஆகியோரையும், அதே கோரிக்கையை வலியுறுத்தி இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொருளாளர் தம்பி சாதிக் பாட்ஷாவையும் திமுக அரசு கைதுசெய்து சிறைப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நாட்டை ஆளும் கொடுங்கோல் பாஜக அரசால் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, தங்களது உரிமைகள் பறிக்கப்படும் நிலையில், அதற்கெதிராகப் போராடி அறச்சீற்றத்தையும், உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்துகிற வேளையில், இசுலாமியப்பெருமக்களுக்குத் துணைநிற்காது அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தைரியமிருந்தால் பாஜக வேட்பாளர்களைக் கடத்துங்கள்" - சீமான் காட்டம்! | Ntk co ordinator seeman slams political parties in chennai press meet

அரசதிகாரத்தின் மூலமோ, ஆதிக்கத்தின் மூலமோ ஒடுக்கப்பட்டு, வீழ்த்தப்பட்டு, பாதிக்கப்பட்டு நிற்கிற மக்களின் பக்கம் நிற்பதே அறம். அதுவே சமூக நீதியுமாகும்! அவ்வாறு, ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் வாயிலாகவே வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இசுலாமிய மக்களின் பக்கம் நின்று, அவர்களுக்காகக் குரலெழுப்ப வேண்டிய திமுக அரசு, அதற்கு நேர்மாறாக அவர்கள் மீதே அடக்குமுறையை ஏவிவிடுவது ஏற்கவே முடியாத எதேச்சதிகாரப்போக்காகும். அநீதிக்கெதிரான தங்களது அறச்சீற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக ஆத்திரத்தில் வெளிப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு ஐயா ஜார்ஜ் பொன்னையா, அண்ணன் தடா ரஹீம் போன்றவர்களைக் கைது நடவடிக்கைக்குட்படுத்தி, சிறைப்படுத்தும் திமுக அரசு, சமூகப்பூசலை உருவாக்கும்விதமாகத் தொடர்ச்சியாகப் பேசி வரும் எச்.ராஜா, சுப்ரமணியசுவாமி போன்ற பாஜக தலைவர்கள் மீது கைவைக்கத் தயங்குவதேன்? வன்கொடுமைத்தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டும்கூட தில்லை தீட்சிதர்களைக் கைதுசெய்ய மறுப்பதேன்? எமது இசுலாமியச்சொந்தங்களுக்கு ஒரு நீதி! அநியாயம் செய்திடும் இந்துத்துவக்கொடுங்கோலர்களுக்கு ஒரு நீதியா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? வெட்கக்கேடு!
ஆகவே, ஹிஜாப் தடைக்கெதிரானப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய  கோவை ரகமத்துல்லாஹ், தம்பி ஜமால் உஸ்மானி உள்ளிட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெற்று. உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
Previous Post

மஹத் ராக்வேந்திரா, தேவிகா சதீஷ், மானசா சௌத்திரி நடிக்கும் இணையத் தொடர் “ஈமோஜி” !

Next Post

இணையத்தில் வைரலாகும் ‘தூஃபான்’: ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட பாடல்

Next Post

இணையத்தில் வைரலாகும் 'தூஃபான்': ட்ரெண்டிங்கில் இருக்கும் 'கே ஜி எஃப் 2' பட பாடல்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.