• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை உலக நாயகன் Dr. கமல் ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார்

by Tamil2daynews
May 15, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழக முன்னாள் துணை அமைச்சர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை உலக நாயகன் Dr. கமல் ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார்

 

இன்று சென்னை அடையாறில் அமைந்துள்ள Dr. எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் தமிழக இந்து அறநிலையத்துறை துணை அமைச்சரும், திரைப்பட கலைஞர் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் 35வது நினைவு நாள் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பத்மபூஷன் கமல் ஹாசன் அவர்கள் அமரர் ஐசரி வேலன் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் “இலவச குடும்ப சுகாதார அட்டை” வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து நலிந்த நாடக நடிகர்களுக்கு வேல்ஸ் இலவச குடும்ப சுகாதார அட்டையுடன் புத்தாடைகளை வழங்கினார் உலகநாயகன் Dr. கமலஹாசன் அவர்கள். இதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் பயன் பெற்றார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. கமலஹாசன் அவர்கள் அமரர் திரு. ஐசரி வேலன் அவர்கள் உடனான நட்பு குறித்தும், திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து உதவி வரும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களை வாழ்த்தி, பாராட்டினார்.அதனை தொடர்ந்து அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களுடன் நடித்த நடிகர் பிரபு, நடிகை லதா, இயக்குனர் RK செல்வமணி, நடிகர் பாக்கியராஜ், நடிகர் கவுண்டமணி, நடிகர் செந்தில், நடிகை ஜெயசித்ரா, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகர் SV சேகர், தயாரிப்பாளர் K ராஜன், நடிகை ராதிகா, நடிகர் ராஜேஷ், நடிகை குட்டி பத்மினி, நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், நடிகர் பிரசாந்த், நடிகர் சின்ன ஜெயந்தி உள்ளிட்ட முன்னனி நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திரைப்பட அனுபவங்கள் குறித்தும் அவர் செய்த சேவைகள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும் டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் தமது தந்தை அமரர் திரு ஐசரி வேலன் அவர்களின் நினைவு நாளான மே 14 ஆம் தேதி ஆண்டுதோறும் நலிந்த நாடக நடிகர்கள் மற்றும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு விருந்து மற்றும் புத்தாடைகள் வழங்கி சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

முன் பதிவில் முந்திய ஜுராசிக் பார்க் வேர்ல்ட் டமினியன்

Next Post

பிரம்மாண்டத்தின் உச்சமாய் வருகிறது “தி வாரியர்” படத்தின் டீசர்..!

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

பிரம்மாண்டத்தின் உச்சமாய் வருகிறது "தி வாரியர்" படத்தின் டீசர்..!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை அசத்தியுள்ளது டிஸ்னி + ஹாஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.