• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி

by Tamil2daynews
May 22, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
யுவன் சங்கர் ராஜாவை நெகிழ வைத்த நடிகர் கார்த்தி

உண்மையான நட்பை போற்றுவதில், பொக்கிஷமாகப் பாதுகாப்பதில் பெயர் பெற்ற நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பிரீமியம் கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

கார்த்தியின் பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா, பிரியாணி மற்றும் வெளியாகவிருக்கும் விருமன் உள்ளிட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்திருப்பவர் யுவன். அவருக்கு இந்த விலையுயர்ந்த பரிசை தனது அன்பின் அடையாளமாக வழங்கியுள்ளார் கார்த்தி. கார்த்தி மற்றும் யுவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், அந்தப் பருவத்திலிருந்தே இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த யுவனுக்கு விலையுயர்ந்த பிரீமியம் கைக்கடிகாரம் தந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் கார்த்தி.

விருமன் படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா விரைவில் தொடங்கவுள்ளார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31 அன்று விருமன் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே, விருமானுக்காக யுவன் இசையமைத்து சித் ஸ்ரீராம் பாடிய கஞ்சா பூவு கண்ணால பாடலின் அழகான முன்னோட்டம், சுமார் 3.7 மில்லியன் பார்வைகளைப் பெற்று இன்னும் யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விருமன் தவிர, இன்னும் இரண்டு திரைப்படங்கள் கார்த்தியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வன் மற்றும் மித்ரன் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லரான சர்தார்

பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், சர்தார் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்புத் தரப்பு விரைவில் அறிவிக்கவுள்ளது.
Previous Post

விஜய் சேதுபதி, சூரி, நடிப்பில் வெற்றி மாறனின் விடுதலை..!

Next Post

உற்சாகத்தில் “நெஞ்சுக்கு நீதி” Romeo Pictures ராகுல்..!

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

உற்சாகத்தில் "நெஞ்சுக்கு நீதி" Romeo Pictures ராகுல்..!

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.