தமிழ் திரை உலகில் கால் பதிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம்..!
குஜராத் திரைப்படத் துறை மற்றும் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.அதுல் போசாமியா, தற்போது தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். அதுல் இந்தியா மூவீஸ் (Atul India Movies) நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்தை இயக்குநர் மிஷ்கின் அவர்களின் முன்னாள் இணை இயக்குனர் அக்கலீஸ் இயக்குகிறார்.“புகழ் பெற்ற தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக எனது பயணத்தைத் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் அதன் வலுவான உள்ளடக்கம் சார்ந்த கதைக்களங்கள், அற்புதமான கதைசொல்லல் மற்றும் திறமையான நடிகர்களின் உழைப்பால் பான்-இந்திய அளவில் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அதுல் இந்தியா மூவீஸ் தமிழ்த் திரையுலகின் குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் மதிப்புமிக்க படைப்புகளை தொடர்ந்து தயாரிப்போம். எங்களின் முதல் தயாரிப்பை அறிமுக இயக்குநர் அக்கலீஸ் இயக்குகிறார். அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் ஸ்கிரிப்டை விவரித்தபோது, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்கும் அம்சங்கள் கதையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.









