• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

by Tamil2daynews
July 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் ‘ லால் சிங் சத்தா’வும் இணைந்திருக்கிறது.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது. அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
Laal Singh Chaddha: Udhayanidhi Stalin's Red Giant Movies To Present In Tamil Naduஅமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Previous Post

தமிழ் திரை உலகில் கால் பதிக்கும் பிரபல பாலிவுட் நிறுவனம்..!

Next Post

‘சீயான் 61’ பட தொடக்க விழா

Next Post

'சீயான் 61' பட தொடக்க விழா

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.