• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டப்பிங் துறையில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்த ரவீனா ரவி

by Tamil2daynews
September 24, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அனைவருக்கும் வணக்கம் ,
திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு  பின்னணி குரல் கலைஞராக என் பத்து வருடங்கள் நிறைவடைகிறது…
இந்த திரை பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற கடமை பட்டிருக்கிறேன்..
கடவுளுக்கு என் முதற்கண் நன்றி
சிறுவயதுமுதல் இன்று வரை எல்லா படிகளிலும் எனக்கு துணை நிற்கும் பெற்றோரின் அளவுகடந்த அன்பிற்கு நன்றி…என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என் தந்தை இன்று என்னோடு இல்லை…ஆனால்  என்மீது எல்லையற்ற  பெருமிதம் கொள்வார் என நம்புகிறேன்..
A Fun Dubbing Session with Raveena & VJ Ashiq | US 45 - YouTube

மாதா பிதா குரு தெய்வம் என்று சொல்வார்கள்…என் அம்மாவே  என் குரு , ஸ்ரீஜா ரவி அவர்கள்..இன்று வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணிபுரிந்ததுடன் , ஐந்து மாநில விருதுகள் பெற்று நாற்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையிலிருக்கிறார்..

என் உயிர்,  என் உலகம் எல்லாமே என் பெற்றோர்  ரவீந்திரநாதன் மற்றும்  ஸ்ரீஜா ரவி அவர்கள் தான்..
என் நண்பர்கள் , என் உற்றார் உறவினர்கள் , என் மீது அன்புள்ளம் கொண்டு துணைநிற்கும்  அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…இது தொடரும் என நம்புகிறேன்..
இதுவரை 104 இயக்குனர்களிடம் நான் பணிபுரிந்திருக்கிறேன்…அவர்கள் அத்தனை பேரும் ஒரு கலைஞராக என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியிருக்கிறார்கள்…
நான் பணியாற்றிய அனைத்து தயாப்பாளர்களுக்கும் , உதவி இயக்குனர்களுக்கும் , ஒலிப்பதிவு கலைஞர்களுக்கும் , ஒலிப்பதிவு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உள்ளம் கனிந்த நன்றிகள்…என் பயணத்தில் அவர்கள் பங்களிப்பு ஈடுஇணையற்றது…
இந்த நன்றி மடல் நான் குரல் கொடுத்த  கதாநாயகிகளுக்கு நன்றி கூறாமல் நிறைவடையாது…வெள்ளிதிரையில் அவர்கள் குரலாக ஒலிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை…
Sreeja ravi And Raveena Ravi interview, 'പലപ്പോഴും തൊണ്ടയില്‍ നിന്നും ചോര പൊടിഞ്ഞിട്ടുണ്ട്, മഞ്ജു പൊട്ടിക്കരയുന്ന സല്ലാപത്തിലെ സീൻ കുറേത്തവണ ചെയ്യേണ്ടി ...
ஒவ்வொரு திரைப்படத்தின் வாய்ப்பு வரும்பொழுதும் அதை எனக்கு தெரியப்படுத்தும் பின்னணி குரல் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.இரண்டு வயதில் தொடங்கிய இந்த பயணத்தின் மிகப்பெரிய தூண்
“SICTADAU” சங்கம்
ஊடக நண்பர்கள் அளித்த தொடர் ஆதரவு ஒரு நடிகையாகவும் நான் வெள்ளித்திரையில் தோன்ற உறுதுணையாக நின்றது..
Raveena Ravi Age, Wiki, Family, Husband, Movies, Biography - Breezemasti
அதோடு சமூக வலைதள நண்பர்கள் அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி…உங்கள் பாராட்டுக்களும் விமர்சனங்களும் என்னை மெருகேற்றிக்கொள்ள துணை நிற்கிறது…
நன்றி நன்றி நன்றி நெஞ்சார்ந்த நன்றி
பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி…என் மனதிற்கு  நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்ய உங்கள் ஆதரவே முக்கியமான காரணம்…எனக்கு மட்டுமில்லை செய்யும் தொழிலிற்கு உண்மையாக இருந்தால் எல்லோருக்கும் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைத்தே தீரும்…
இப்படிக்கு  
ரவீனா ரவி
Previous Post

ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற சுந்தர்சியில் “காபி வித் காதல்’ இசை விழா

Next Post

பிரம்மாண்டமாக நடைபெற்ற சுந்தர்சியில் "காபி வித் காதல்' இசை விழா

Popular News

  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரிஸ் கபே – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026

வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

September 20, 2026

பீப் – விமர்சனம்

September 20, 2026

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

September 20, 2026

‘மீசைய முறுக்கு 2’ இசைக் கலைஞர்களின் வாழ்க்கை, போராட்டம், கனவுகளைப் பேசும் உலகளாவிய கதை – ஹிப்ஹாப் தமிழா ஆதி

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.