• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home அரசியல்

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!

by Tamil2daynews
January 16, 2023
in அரசியல்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திருவாரூர் கலைஞர் கருணாநிதி வீட்டை சென்னைக்கு கொண்டு வந்த கலை இயக்குநர் G.துரைராஜ் !!

 

தமிழ் சினிமாவில் முன்னணி கலை இயக்குனராக வலம் வரும் G துரைராஜ், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட பொங்கல் விழாவிற்காக, கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை அச்சு அசலாக சென்னையில் அமைத்துள்ளார்.
சட்ட மன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் ஏற்பாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் பங்குகொண்ட பொங்கல் விழா குருபுரம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இவ்விழாவிற்காக தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீட்டை சென்னையில் அமைத்துள்ளார் கலை இயக்குநர் G துரைராஜ். அச்சு அசலாக  நிஜ வீட்டை போலவே அமைந்திருக்கும் இந்த வீட்டினை,  பொதுமக்கள் ஆவலுடன் பார்வையிட்டனர். மேலும் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் வீட்டினை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து கலை இயக்குநர் G துரைராஜ் கூறியதாவது…  
நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறேன், ஆனாலும் ஒரு பொது விழாவிற்கு செட் அமைப்பது இதுவே முதல் முறை. திரு.உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்று கலந்துகொள்ளும் முதல் பொங்கல் விழா, அதற்காக செட் அமைக்க சொன்னபோது, கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அப்படித்தான் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவாரூர் வீடு ஐடியா வந்தது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவரது தாத்தாவின் இல்லத்தில் நின்று, பொதுமக்களுடன் பொங்கல் கொண்டாடினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த வீட்டை உருவாக்கினோம். இதற்காக திருவாரூர் சென்று மாதிரி வரை படங்களை தயார் செய்து , கலைஞர் வாழ்ந்த வீட்டை அப்படியே இங்கு உருவாக்கினோம். பொதுமக்கள் கூட்டமாக வந்து, ஆவலுடன் பார்வையிட்டது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தனியே பாராட்டியது பெரிய ஊக்கம் தந்தது என்றார்.
கொடி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கி சட்டை, ஐங்கரன் முதலாக பல்வேறு தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர் கலை இயக்குநர் G துரைராஜ் என்பது குறிப்பிடதக்கது.
Previous Post

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் …

Next Post

ஆர். மாதவனுடைய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது

Next Post

ஆர். மாதவனுடைய ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் நுழைந்திருக்கிறது

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் IMDb-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.