• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பகாசூரன் “ வெளியான பிறகே என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும் ! இயக்குனர் மோகன்.G

by Tamil2daynews
February 15, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பகாசூரன் “ வெளியான பிறகே என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும் !  இயக்குனர் மோகன்.G .

 

‘பழைய வண்ணாரப்பேட்டை’,  ‘திரௌபதி’,  ‘ருத்ர தாண்டவம்’  படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம்  ‘பகாசூரன்’.
இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, பி.எல்.தேனப்பன், குணாநிதி, சசி லையா, ரிச்சா, கூல்ஜெயந்த்,  ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இசையமைக்க, ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்திற்கு எஸ்.தேவராஜ் எடிட்டிங் செய்ய,  கலை இயக்குனராக எஸ்.கே பணியாற்றுகிறார். மிரட்டல் செல்வா சண்டை பயிற்சி செய்ய, ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் மோகன்.G
படம் பற்றி இயக்குனர் மோகன்.G பேசியதாவது…
திரௌபதி ருத்ர தாண்டவம் திரைப்படம் சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதை போலவே பகாசூரனும் சேலம், ஆற்காடு, பாண்டிச்சேரி, ஆகிய பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட ஒரு கதை.
இந்த திரைப்படம் தற்போது சமூகத்தில் மசாஜ் செண்டர்கள் என்ற பெயரில் நடக்கும் அநியாயங்கள், ஆன்லைன் பிராஸ்டியூஷன் virtual பிராஸ்டியூஷன் ஆகியவற்றில் என்ன நடக்கிறது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த மக்களுக்காக, பெற்றோர்களுக்காக உருவாக்கப்பட்ட திரைக்கதை இது.
இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளி வந்திருந்தாலும் கதையின் முக்கிய நாயகனாக அவர் நடித்து வெளியாகும்  முதல் திரைப்படம் இதுவே. இந்த படத்தில்  பக்க பலமாக நட்டி நட்ராஜ் செல்வ ராகவனுக்கு இணையாக ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
முந்தைய எனது படங்களைப் போலவே இந்த படத்திலும் ஒரு கதைக்களம் உள்ளது. நான் திரும்ப திரும்ப சொல்லும் ஒரே விஷயம் பெற்றோர்களுக்கும் இளம் பெண்களுக்கும் இளம் வாலிபர்களுக்கும் நவீன கால மொபைலில் என்ன வகையான செயலிகள் ஆபத்தான வகையில் அமைந்துள்ளன. அவற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்வது எப்படி என்பதை விரிவாக இந்த திரைப்படத்தில் சொல்லியிருக்கிறோம். படம் வந்த பிறகே படத்தில் என்னென்ன சர்ச்சைகள் உள்ளது என்பது மக்களுக்கு தெரிய வரும்.படம் வருகிற வெள்ளிக்கிழமை பிப்ரவரி 17 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.G.T.M  பட நிறுவனம் சார்பில் கெளதம் இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்கள்என்றார் இயக்குனர் மோகன்.G.
Previous Post

விகாஸ் நடிக்கும் “துச்சாதனன்”

Next Post

இசைஞானியின் இசையில் பள்ளி பருவ காதலை சொல்லும் ‘நினைவெல்லாம் நீயடா’..!

Next Post

இசைஞானியின் இசையில் பள்ளி பருவ காதலை சொல்லும் 'நினைவெல்லாம் நீயடா'..!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • “வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.