• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

by Tamil2daynews
February 17, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின் – அபர்நிதி நடிக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

 


சஸ்பென்ஸ் – த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் ‘Demon’ படத்தின் முதல் பார்வையை நடிகர் விஜய்சேதுபதி & இயக்குநர் மிஷ்கின் வெளியிட்டுள்ளனர். தேசியவிருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்து இருக்கிறார்.
‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, ‘காவிய தலைவன்’, ‘ஜெயில்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  ரமேஷ் பழனிவேல், ‘Demon’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இயக்கம் மட்டுமின்றி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

மோகன்லாலின் தேசியவிருது பெற்றத் திரைப்படமான ‘மரைக்காயர்’ படத்தில் தனது அற்புதமான இசைக்காக பாராட்டுகளைப் பெற்ற ரோனி ரஃபேல், இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகிறார். ஆர்.எஸ். ஆனந்த குமார் (பிரபுதேவாவின் ‘குலேபாகவலி’ & ஜோதிகாவின் ‘ஜாக்பாட்’ புகழ்) இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Imageஇந்தப் படத்தின் கதை நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இதன் திரைக்கதை அம்சங்கள் நிச்சயம் பார்வையாளர்களை கவரும். ஹாரர்- சஸ்பென்ஸ்- த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கக்கூடிய இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கும் பிடித்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பீட்சா, ராட்சசன், பிசாசு மற்றும் பல படங்கள் இந்த ஜானரில் வெளியாகி வெற்றிப் பெற்றதற்கு உதாரணங்களாக இருக்கிறது. ‘Demon’ திரைப்படம் இவை அனைத்தையும் உள்ளடக்கி, உணர்ச்சிகரமான கதையுடன் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லிங்குசாமி வழங்கிய ‘பிகினிங்’ படத்தில் கதாநாயகனாக நடித்த சச்சின் இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ்குமாரின் நடிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயில்’ படத்தில் சிறந்த நடிப்பையும், ‘தேன்’ படத்திற்காக பல விருதுகளையும் பெற்ற அபர்நதி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.  ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான ‘உடன்பால்’ இணையத்தொடரிலும் அபர்நிதியின் நடிப்பிற்கு சிறந்த விமர்சனங்களும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Image
கும்கி அஸ்வின், இன்ஸ்டாகிராம் சென்சேஷன் ரவீனா தாஹா, பிக் பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, மிப்புசாமி, பிரபாகரன், அபிஷேக், தரணி, நவ்யா சுஜி, சலீமா மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திகைப்பூட்டும் திரைக்கதை மற்றும் புதிய விசித்திரமான காட்சி அமைப்புடன் கூடிய ‘Demon’, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய  திரை அனுபவத்தை விரைவில் வழங்கவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸ் பல  அறிமுக இயக்குநர்களுடன் படங்கள் செய்யத் திட்டமிட்டுள்ளது, இது குறித்தான  அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:

எழுதி இயக்கியவர்: ரமேஷ் பழனிவேல்,
தயாரிப்பு: ஆர்.சோமசுந்தரம்,
இசை: ரோனி ரஃபேல்,
ஒளிப்பதிவு: ஆர்.எஸ். ஆனந்த குமார் எம்.எஃப்.ஐ,
படத்தொகுப்பு: ரவிக்குமார். எம்,
கலை: விஜய் ராஜன்,
பாடலாசிரியர்: கார்த்திக் நேதா,
தயாரிப்பு நிர்வாகி: குமார் வீரப்பசாமி,
சண்டைக்காட்சிகள்: ராக் பிரபு,
ஆடை: கடலூர் எம்.ரமேஷ்,
ஒலிக்கலவை: ஹரிஷ்,
ஒலி வடிவமைப்பு: ராஜு ஆல்பர்ட்,
VFX & DI: Accel Media,
வண்ணம்: ஜி.எஸ்.முத்து,
தயாரிப்பு அமைப்பாளர்: வி.பாலகிருஷ்ணன்,
படங்கள்: முத்து வேல்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்,
விளம்பர வடிவமைப்பு: யுவராஜ் கணேசன்

Previous Post

கிரிஷ் G இசையில், ராணவ், கனா பாலா, யாஷிகா ஆனந்த் நடிப்பில் மொக்க காதல் ஆல்பம் பாடல் !

Next Post

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)!

Next Post

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் வழங்கும், இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ‘திருவின் குரல்’ (Voice of Thiru)!

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.