• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !!

by Tamil2daynews
May 4, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தளத்தின் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது !! 

 

சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல்  நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த வெப் சீரிஸான ‘மத்தகம்’ சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.
Screen Scene Media Entertainment தயாரிப்பில்,  உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸை இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.
நடிகர் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும், இந்த வெப் சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
மத்தகம் என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும். யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் படம் குறித்துக் கூறுகையில்..
30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சீரிஸ் தான் “மத்தகம்”.
ஒரு இரவில் நாயகனுக்கும், வில்லனுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டத்தைப் படம்பிடித்தது சவாலானதாக இருந்தது. இந்த சீரிஸ் ரசிகர்களுக்குக் கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.
இந்த வெப் சீரிஸுக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்துள்ளார்.
இந்த சீரிஸுன் பரப்பரப்பான ஆக்சன் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லரி கலை இயக்கம் செய்துள்ளார்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில்  பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.
Previous Post

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

Next Post

’வெப்பன்’ படத்தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு விபத்தின் போது இறந்த லைட் மேன் குடும்பத்திற்கு 12 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்!

Next Post

’வெப்பன்’ படத்தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பு விபத்தின் போது இறந்த லைட் மேன் குடும்பத்திற்கு 12 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

August 20, 2026

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.