• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

யாதும் ஊரே யாவரும் கேளிர்-விமர்சனம்

by Tamil2daynews
May 19, 2023
in விமர்சனம்
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யாதும் ஊரே யாவரும் கேளிர்-விமர்சனம்

 

உலகிலுள்ள எல்லா ஊரும் நமது ஊரே; வையத்திலுள்ள அனைத்து மக்களும் நம் உறவினரே!’ என்ற ஒப்பற்ற தத்துவத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தியம்பிய கணியன் பூங்குன்றனாரின் மிகப் பிரபலமான புறநானூற்றுச் செய்யுளின் முதல் வரியைத் தலைப்பாக்கி, பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தனர் படக்குழு.
இலங்கையில் இருந்தால் சில்லுகளின் (குண்டுகள்) வெடிப்பால் எந்நேரமும் இறக்கலாம் என அஞ்சி நடிகர் ராஜேஷ் சிறுவனாக இருக்கும் விஜய்சேதுபதியை லண்டன் அனுப்புகிறார். செல்லும் வழியில் சோதனைச் சாவடியில் அகப்படுகிறான் சிறுவன். அந்தச் சிறுவன், விஜய் சேதுபதியாக வளர்ந்து கொடைக்கானலில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு வருகிறார். அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்கிறார். தனது அடையாளத்தை மறைக்கிறார். இன்னொரு புறம் மகிழ் திருமேனி விஜய்சேதுபதியைக் கொல்ல வேண்டும் என அலைகிறார். இப்படி அலைபாயும் கதையின் இலக்கு என்ன என்பதை 2 மணி நேரம் 26 நிமிடங்களில் சொல்கிறது படம்.
Yaadhum Oore Yaavarum Kelir teaser: Vijay Sethupathi plays a mystery man, who has a message for the world | Entertainment News,The Indian Express

நாம் பார்த்துப் பழகிய அதே விஜய்சேதுபதி. கொஞ்சம் ‘96 ஸ்டைலில் அமைதியாகப் பேசுகிறார். அதுவே அகதியின் உடல்மொழியைக் கொண்டு வந்துவிடும் என நம்பியிருக்கிறார். மேகா ஆகாஷின் பாத்திரம் வெறும் ஆர்வக் கோளாறாகவே மனதில் பதிகிறது. துடிப்பாக வரும் மகிழ் திருமேனி கேரக்டரும் ஸ்ட்ராங்காக நிறுவப்படாததால் அவரின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. மறைந்த நடிகர் விவேக் ஆங்காங்கே கவனிக்க வைக்கிறார். இதர படமாந்தர்கள் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி நடித்துள்ளனர். விஜய்சேதுபதி அக்காவாக நடித்துள்ள பெண்மணி மட்டுமே உயிர்ப்பான அகதியாக மனதில் பதிகிறார்.

கதையில் உள்ள நல்ல கருத்தை உள்வாங்கி உணர்வுபூர்வமான இசையை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் K. பிரசன்னா. பாடல்களும் கவர்கின்றன. ஒளிப்பதிவாளர் தனக்கு வழங்கப்பட்ட பணியைச் செவ்வனே செய்துள்ளார். க்ளைமாக்ஸ் காட்சியின் லைட்டிங் மட்டும் செயற்கைத் தனமாக தெரிந்தது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸ் எப்போது? | yaadhum oore yaavarum kelir movie release update - hindutamil.in
நாடற்ற அகதிகளுக்கு குடியுரிமை வழங்கி, அவர்களும் நாடுள்ள மனிதர்களாக கருதப்பட்டால் தான், அவர்களின் திறமைகள் உலகுக்குத் தெரியவரும் என்று சொல்கிறது படம். சொல்லியிருக்கும் செய்தியில் இருக்கும் கனம், அதைச் சொன்ன விதத்தில் வெளிப்படவில்லை. திரைமொழியில் அதீத கவனம் செலுத்திs செதுக்கப்பட்டிருந்தால், தமிழில் மிக முக்கியமான சினிமாவாக வந்திருக்கும்.
Previous Post

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் விமர்சனம்

Next Post

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்!

Next Post

நடிகை ஜான்வி கபூர் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ மீது தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்!

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.