• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன்!

by Tamil2daynews
May 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன்!

 

நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது நடிப்புத் திறமைக்கு அப்பால், அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவை கொடுப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்பினை கொடுத்தார் துஷாரா. அருள்நிதிக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடித்துள்ள, வரவிருக்கும் திரைப்படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் தனக்கு மற்றுமொரு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளார். படம் உலகம் முழுவதும் நாளை (மே 25, 2023) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் அணியுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகை துஷாரா விஜயன் கூறும்போது, ​​“எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்.  திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் கொடுத்துள்ளார்” என்றார்.
அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ​​சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் ‘ராட்சசி’ புகழ்) எழுதி இயக்கியுள்ளார்.  ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு மற்றும் இசை டி.இமான். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் யுகபாரதி (பாடல் வரிகள்), நாகூரன் (எடிட்டர்), மகேந்திரா (கலை இயக்குநர்), தினா (நடன இயக்குநர்), கணேஷ் (ஸ்டன்ட்), அன்பு (ஸ்டில்ஸ்), சுபீர். ஆர் (ஆடைகள்) மற்றும் பாலகுமார் (நிர்வாகத் தயாரிப்பாளர்).
Previous Post

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில், நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், நடிகர் கவின் நடிக்கும் புதிய படம், பூஜையுடன் துவக்கம் !!

Next Post

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

Next Post

கழுவேத்தி மூர்க்கன் விமர்சனம்

Popular News

  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஷாருக்கானின் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் ‘கிங் – KING’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘தூ மில் ஜாயே – Tu Mil Jaaye’!

November 4, 2026

ட்ரூ ஸ்டோரீஸ் தயாரிப்பில் ஷேன் நிகமின் அடுத்த திரைப்படம் ஏற்காட்டில் பூஜையுடன் தொடக்கம்!

November 4, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸர் மூலமாக வெளியீட்டுத் தேதியை அறிவித்தது படத்தயாரிப்பு நிறுவனம்!

November 4, 2026

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து அதிரடியான புதிய போஸ்டர்களை வெளியிட்ட மார்வெல் ஸ்டுடியோஸ்!

November 4, 2026

‘ஜான் டோ’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு

November 4, 2026

‘தர்மன்’ திரைப்படத்தில் இணைந்த நட்சத்திரம் – நடிகை ஶ்ரீலீலா!

November 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.