• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது

by Tamil2daynews
July 9, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான ‘கண்ணே கலைமானே’ இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது

 

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது.

இத்திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை ‘கண்ணே கலைமானே’ குவித்து சாதனை படைத்துள்ளது.
சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும்  ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் வென்றுள்ளனர்.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள இயக்குநர் சீனு ராமசாமி, “இயற்கை விவசாயிக்கும் கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் இருந்து வந்த நேர்மையான வங்கி அதிகாரிக்குமான வாழ்வியல் உண்மை பேசும் ‘கண்ணே கலைமானே’வின் திரைப்பட விழா பதிப்பை (ஃபெஸ்டிவல் வெர்ஷன்) 2019ம் ஆண்டு மத்திமத்தில்  படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் உதவியுடன் உருவாக்கியிருந்தேன். திரைப்பட விழாக்களில் பங்கு பெறும் வகையில் 1.43.08 நிமிடங்கள் ஓடக்கூடிய திரைப்படமாக யதார்த்தத்திற்கு நெருக்கமாக அனைத்து நிலையிலும் உருவாக்கியிருந்தோம்.
இரண்டு  விருதுகளை கொல்கத்தா திரைப்பட விழாவில் ‘கண்ணே கலைமானே’ பெற்ற நிலையில் கொரோனா எனும் கொடிய நோய் வந்து அனைத்தையும் முடக்கிப் போட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தை பார்த்த உலக சினிமா பாஸ்கரன் உள்ளிட்ட அருமை நண்பர்கள் இதை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பலாமே என்றனர். காலதாமமெனினும் காலஎல்லைகள் பற்றிக் கவலைப்படாத பன்னாட்டு திரைப்பட விழாக்களுக்கு மீண்டும் நம்பிக்கையோடு அனுப்பினோம். எங்கள் நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகள் பெற்றது மகிழ்ச்சி,” என்று கூறினார்.
Previous Post

மாமன்னன் திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!!

Next Post

ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி! ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வைரல்!

Next Post

ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ஆண்டனி! ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வைரல்!

Popular News

  • மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    மாநில அளவிலான பாரா பளுதூக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடிய 9 மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர்.*

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய போகுமிடம் வெகு தூரமில்லை படக்குழுவினர்

    0 shares
    Share 0 Tweet 0
  • “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தில் நடிப்பில் மிரட்டிய விருமாண்டி அபிராமி!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

July 28, 2026

ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்

July 28, 2026

‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!

July 28, 2026

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 28, 2026

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு

July 28, 2026

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.