• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

‘சங்கத்தமிழன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!

by admin
September 18, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
‘சங்கத்தமிழன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!!
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் ‘சங்கத்தமிழன்’ படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படம் பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம்  கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்திருக்கும் இந்த படத்திலிருந்து சமீபத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு. கார்த்திக் வரிகளில் வெளியான “கமலா ” மற்றும் பிரான்சிஸ் எழுதி ராக்ஸ்டார் அனிரூத் பாடிய ” சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் ” என இரண்டு பாடல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 17 ஆம் தேதி சன் ஸ்டுடியோஸில் நடைபெற்றது . இந்த விழாவில் சங்கத்தமிழன் படக்குழுவினர்களான கதாநாயகன் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி  , இயக்குனர் விஜய்சந்தர் , ராஷி கண்ணா , நிவேதா பெத்துராஜ் , இசையமைப்பாளர்கள் விவேக் சிவா , மெர்வின், ஒளிப்பதிவாளர் வேல் ராஜ் , சூரி , ஸ்ரீமன் ,ஜான் விஜய் , அகல்யா வெங்கடேசன் , பாடலாசிரியர்  விவேகா , நிர்வாக தயாரிப்பாளர்கள் ரவிச்சந்திரன் ,குமரன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

தொழில்நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு   – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு     – பிரவீன் K.L

சண்டை  பயிற்சி  – அனல்  அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன்  , குமரன் .

நடனம் – ராஜு சுந்தரம் , செரிஃப் ,சாண்டி

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது.

Previous Post

.லெனின் கதை, திரைக்கதை, வசனத்தில், இ.வி.கணேஷ் பாபு இயக்கும் “கட்டில்”!

Next Post

மோன்ஸ் செல்வம் என்ற 22வயது  பெண்ணின் உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனை முயற்சி. 

Next Post
மோன்ஸ் செல்வம் என்ற 22வயது  பெண்ணின் உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனை முயற்சி. 

மோன்ஸ் செல்வம் என்ற 22வயது  பெண்ணின் உலகின் மிக நீளமான சித்திரம் வரையும் சாதனை முயற்சி. 

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சண்டைக்காரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

காதல் கதைக்குள் இப்படி ஒரு ஆக்ஷனா? ‘அன்பில் அவன்’ டிரெய்லர் வெளியானது!

September 19, 2026

‘கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 19, 2026

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்- The Paradise ‘படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

September 19, 2026

சண்டைக்காரி – விமர்சனம்

September 19, 2026

சில்வர் ஸ்ட்ரீம் ஸ்டுடியோஸ் பேனரின் கீழ் சௌந்தர்யா திலீபன், என். ராஜேந்திரன், ராமு தங்கராஜ் தயாரிப்பில், பிளாக் ஒயிபோ புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் அருண் மாதேஸ்வரன் வழங்கும் ‘டிரான்ஸ்பர்’!

September 19, 2026

பாரிஸ் கபே – விமர்சனம்

September 19, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.