• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘எக்கோ’ விமர்சனம்

by Tamil2daynews
July 23, 2023
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘எக்கோ’ விமர்சனம்

 

ஶ்ரீ விஷ்ணு விஷன்ஸ் சார்பாக டாக்டர் ராஜசேகர் தயாரிப்பில், நவீன் கணேஷ் இயக்கத்தில், ஶ்ரீகாந்த் – வித்யா பிரதீப் – பூஜா ஜவெரி – ஆஷிஷ் வித்யார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் “எக்கோ”.

அழகான திருமண வாழ்க்கையில் படம் ஆரம்பிக்கின்றது.

ஸ்ரீகாந்த் வித்யா பிரதீப்பும் கணவன் மனைவியாக அழகான நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கும் தருணத்தில் திடீரென பூதாகரமாய் வருகிறது அந்த சத்தம்.

ஒரே அறையில் கணவன் மனைவி இருவரும் உறங்கும் பொழுது ஸ்ரீகாந்தின் மனைவியான வித்தியா பிரதீப்புக்கு மட்டும் தன் தலைக்குள் ஒரு விதமான நிசப்தமும் பார்க்கும் இடமெல்லாம் ஒரு கொடூர குணம் உள்ள பேய்களை காட்டுவதும் ஒரு அமானுஷ்ய சக்தியை காட்டுவதும் திகிலாக செல்கிறது படம்.
இதை பலமுறை ஸ்ரீகாந்திடம் சொல்லி அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை ஒரு மனநல மருத்துவர்கள் பார்க்கலாம் என்று இதயபுரத்தை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க அவரும் இவர் பெரிய விஷயம் அல்ல நல்லா தூங்குங்கள் என்று மாத்திரை கொடுக்கிறார்.

டாக்டர் கொடுத்த மருந்துகளை சாப்பிட்ட பின்பு வித்யாவுக்கு அதே மாதிரியான உணர்வுகளும் தொந்தரவுகளும் ஏற்படவே ஒரு கட்டத்தில் அது முற்றிவிடவே தற்கொலைக்கு முயழ்கிறார்.

தன் மனைவியான வித்தியா பிரதீப் மறைந்த பின்பு மன உளைச்சல் இருந்த ஸ்ரீகாந்திருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது இரண்டாவது மனைவி யார் என்றால் அவருடைய முன்னாள் காதலியும் அவர் வேலை செய்யும் கம்பெனி முதலாளியின் மகளும் ஆன பூஜா திவாரி.

இவரை திருமணம் செய்த பிறகு தன் முதல் மனைவிக்கு வந்த அதே தொந்தரவுகள் ஸ்ரீகாந்த் ஒவ்வொரு நாள் இரவு உறங்கும் பொழுது அனுபவிக்கிறார்.
தனக்கு ஏன் இப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல் ஒருவரை சந்திக்க அவர் மூலம் உண்மை வெளிவருவதே படத்தின் கதை.

படத்துல ஸ்ரீகாந்த் வித்யா பிரதீப்பும் கணவன் மனைவியாக சூப்பரா வாழ்ந்து இருக்காங்க அதிலும் ஸ்ரீகாந்த் தன் மனைவிக்கு செய்யும் துரோக காட்சிகளிலும் அவர் முன்பு நல்ல ஒரு போல் நடிப்பதிலும் இரண்டு விதமான மாறுபட்ட வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த், ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் ஆகிய மூவரும் வரும் அலுவலகம் தொடர்பான காட்சிகள் எல்லாம் திரெளபதி காலத்து திராபைகள். அந்த மொத்தக் காட்சிகளையும் ஒரு அரை மணி நேரம் அமர்ந்தாலே எழுதிவிடலாம் போல் தோன்றுகிறது. அந்தளவுக்குப் பார்த்துப் பார்த்து சலித்த காட்சிகள். அது போல் ஒட்டவே ஒட்டாது தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்ரீகாந்த் அம்மாவின் காட்சிகள். அந்தக் கிராமத்து அத்தியாயம் தான் கதையில் நிகழும் முக்கிய மாற்றத்திற்குக் காரணம் என்றாலும் கூடக் காட்சியமைப்பில் எந்தப் புதுமையுமே இல்லை.
ஸ்ரீகாந்தின் அம்மா கதாபாத்திரத்தில் வரும் ராஜா ராணி சிவகாமியான பிரவீனாவிற்கு, ஊரை நினைத்தும், மகனை நினைத்தும், துயர் கொள்ளும் கதாபாத்திரம். அவரின் திருமணத்தால் தான் ஊரில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்தது, கோயில் பாழடைந்து போனது என்று ஒன்றுக்கு இரண்டு முறை சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பின்கதை படத்தில் மருந்துக்குக் கூட சொல்லப்படவே இல்லை. அந்த ஊராரின் பழிச் சொல்லை மறக்கச் செய்யவே வித்யா பிரதீப்பிற்கும் ஸ்ரீகாந்திற்கும் திருமணம் நடக்கிறது என்கின்ற சப்பைக்கட்டு வேறு. சிறந்த நடிகர்களான டெல்லி கணேஷ், காளி வெங்கட் போன்றோர் ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு போகின்றனர்.
ப்ளாக் மேஜிக் நிபுணராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தியின் நிலைமை அதைவிடப் பரிதாபம். ஓர் இருண்ட பங்களாவிற்குள் மங்களான வெளிச்சத்தில் நான்கைந்து கருப்பு உடையணிந்த கையாட்களைக் காட்டி விட்டால் அவர்கள் மேஜிக் நிபுணரின் குழுவைச் சேர்ந்தவர்களாகி விடுவார்களா என்ன? அதிலும் குறிப்பாக அவர் ஸ்ரீகாந்த வீட்டுக்கு அமானுஷ்யத்தைப் பற்றி ஆராய வரும் காட்சியைப் பார்க்கும் போது ஏதோ சிசிடிவி கேமரா மாட்ட வந்த கும்பலும், திருட வந்தவனும் ஒவ்வொரு கதவாகத் திறந்து பார்க்கும் காட்சியும் நினைவில் வந்து போகிறது.
படத்தில் பாராட்டக்கூடிய ஒரே ஒருவர் கேமராமேன் கோபிநாத் மட்டுமே.தன் வேலையை மிகக் கச்சிதமாக முடித்திருக்கிறார்.

ஒரு நல்ல கதையை எந்தவிதமான விதத்தில் கையாள வேண்டும் என்பதில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

பேராசை பெரு நஷ்டம்..!

தன்வினை தன்னை சுடும்..!

ஹீரோவின் பேராசை உயிர் நஷ்டத்தை கொடுத்திருக்கின்றது.

மொத்தத்தில் இந்த ‘எக்கோ’ ஒரு சிலருக்கு மட்டுமே காதில் கேட்கும்.
Previous Post

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் தண்டட்டி…

Next Post

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘*வானவன்*’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை – நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.

Next Post

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘*வானவன்*’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை - நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.