• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

by Tamil2daynews
July 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

‘தாதா – தி  சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது உறுதி, விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுவதோடு, ஒரு தலைமுறையையே ஊக்குவித்த அவரது பாரம்பரியத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ‘தாதா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இந்த நாள் மேலும் சிறப்பானதாக மாறியுள்ளது. இதனுடன், இப்படம் 2027 மே 14-ஆம் தேதி, நீண்ட விடுமுறை வார இறுதியை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Imageஅதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியை சுழற்றி கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் சினிமா மேஜிக்குடன் மீண்டும் உருவாக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற புதிய யுகத்தின் அடையாளமாகக் கருதப்படும் அந்த கொண்டாட்டம், கங்குலியின் தலைமையில் உருவான தன்னம்பிக்கை, எதிர்ப்பை மீறும் மனப்பாங்கு மற்றும் நம்பிக்கையின் நிலையான சின்னமாக இன்றளவும் நினைவுகூறப்படுகிறது.

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ திரைப்படத்தை விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ளார். லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ள இப்படத்தை, குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்குகின்றனர். லவ் ஃபிலிம்ஸ் தயாரிப்பாக  (  Luv Films production ) உருவாகியுள்ள இப்படம், 2027 மே 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Next Post

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

Next Post

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.