• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சந்திரமுகி 2’ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி

by Tamil2daynews
July 26, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சந்திரமுகி 2’ படத்திற்கு தூங்காமல் பின்னணி இசையமைத்த கீரவாணி

 

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்திற்கு, இரண்டு மாதம் தூங்காமல் கடினமாக உழைத்து பின்னணி இசையமைத்திருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளரான ‘ஆஸ்கார் நாயகன்’ எம். எம். கீரவாணி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை  ஆண்டனி  மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் வித் ஹாரர் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.  ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பின்னணி இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில்,  ”லைக்கா புரொடக்ஷன்ஸின் ‘சந்திரமுகி 2’ பார்த்தேன். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தால் தூக்கம் இல்லாமல் இரவுகளை கழிக்கின்றனர். அப்படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட இரண்டு மாதங்கள் தூக்கமில்லாமல் பணியாற்றியிருக்கிறேன். குரு கிரண் மற்றும் என்னுடைய நண்பர் வித்யாசாகர் ஆகியோர் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவேண்டும்..!” என பதிவிட்டிருக்கிறார்.

இசையமைப்பாளர்கள் குரு கிரண் மற்றும் வித்யாசாகர் ஆகியோர் ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்திற்கு முறையே கன்னடம் மற்றும் தமிழ் பதிப்பிற்கு இசையமைத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருதினை வென்ற பிறகு இந்திய திரை உலகமே திரும்பிப் பார்க்கும் இசையமைப்பாளரான எம். எம். கீரவாணி, லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் பின்னணியிசை குறித்து ட்வீட் செய்திருப்பதால்.. திரை உலகினரிடையே இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

அறிவியல் கலந்த திரில்லர் படம் ரகுமான் – பரத் இணைந்து நடித்துள்ள ” சமரா “

Next Post

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’, ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்

Next Post

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா', ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார்

Popular News

  • சிக்மா’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட Dr B Nail Galaxy…பிரியா தயாநிதி மாறன் திறந்து வைத்தார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நடன அசைவுகளை துல்லியமாக ஆடுவதை விட அதை ரசித்து ஆடுவேன்’ – சாய் பல்லவி

    0 shares
    Share 0 Tweet 0
  • சிக்னல் அட் 11.30 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டெலிவரி பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’

November 29, 2026

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘டிரெயின்’ படத்தின் ‘டிரெயின் ஆன் வீல்ஸ்’ விளம்பரப் பயணம் தொடக்கம்! டிசம்பர் 4-ம் தேதி ரிலீஸ்!

November 29, 2026

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு- KOODU’ திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

November 29, 2026

பேசில் ஜோசப்- LK அக்ஷய் குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி- Raawadi ‘ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு

November 29, 2026

இந்தியாவுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைக் காணிக்கை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ பின்னணியிலான திரைப்படம் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்

November 29, 2026

மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் ரசிகர்களுக்காகக் களமிறங்கும் மலையாளத் திரைப்படங்கள்!

November 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.