• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home Uncategorized

விஜய்யின் லியோ படத்துடன் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் ‘ஆண்டனி’ பட டீசர்!

by Tamil2daynews
October 9, 2023
in Uncategorized
0
விஜய்யின் லியோ படத்துடன் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் ‘ஆண்டனி’ பட டீசர்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய்யின் லியோ படத்துடன் வெளியாகும் ஜோஜு ஜார்ஜின் ‘ஆண்டனி’ பட டீசர்!

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பான் இந்தியா திரைப்படமான ‘ஆண்டனி’ படத்தின் டீசர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துடன் அக்டோபர் 19 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. புகழ் பெற்ற இயக்குனர் ஜோஷி இயக்கிய ‘ஆண்டனி’ படத்தை ஐன்ஸ்டின் மீடியா, நெக்ஸ்டல் ஸ்டுடியோ மற்றும் அல்ட்ரா மீடியா என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் ஐன்ஸ்டின் சாக் பால் தயாரித்து சுஷில் குமார் அகர்வால், நிதின் குமார் மற்றும் ரஜத் அகர்வால் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமாக படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜோஜு ஜார்ஜ், கல்யாணி பிரியதர்சன், செம்பன் வினோத் ஜோஸ், நைலா உஷா உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள ‘ஆன்டனி’ படம் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் 23, 2023 அன்று வெளியாகிறது. ஆண்டனி மற்றும் அவரது நண்பர்கள் சிறு கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ஆண்டனி எதிர்பாராத விதமாக ஒரு கொலை செய்து விடுகிறார். இதன் பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிகள் நிரம்ப சொல்லி இருக்கும் படம் தான் ஆண்டனி. இப்படத்தில் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜ், “ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் ஜோஷி உடன் மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் முந்தைய படமான ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ எனக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், சினிமா வாழ்க்கையின் மைல்கல்லாகவும் அமைந்தது, ‘ஆண்டனி’ நிச்சயம் உங்களை ஏமாற்றாது என்று கூறினார்.

இயக்குனர் ஜோஷியின் படத்தில் முதன் முறையாக நடிக்கும் கல்யாணி பிரியதர்சன் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார், “படத்தின் கதைக்களம் தனித்துவமானது, வழக்கத்திற்கு மாறானது மற்றும் அதே நேரத்தில் நம்மை இணைக்கக்கூடிய உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. மேலும் பார்வையாளர்கள் என்னை இதுவரை எப்படி பார்த்தார்கள் என்பதற்கு நேர்மாறாக எனது பாத்திரம் உள்ளது. ஜோஷி சார் ஆண்டனி படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கினார், இதைவிட த்ரில்லான ப்ராஜெக்ட்டை நான் கேட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அப்படிப்பட்ட அனுபவமுள்ள இயக்குனருடன் வழக்கத்திற்கு மாறான படமொன்றில் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது மற்றும் உணர்வுபூர்வமாக இந்த படம் எதிரொலிக்கும்” என்று கூறினார்.

ரெனதீவின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜோயின் மனதைக் கவரும் இசை, ஷியாம் எடிட்டிங் மற்றும் ஜோஷியின் இயக்கத்தில் உருவாகும் இந்த ஆண்டனி படம் நிச்சயம் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆண்டனி படத்தின் டீசர் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது, மேலும் படம் நவம்பர் 23 வெளியாகிறது.

Previous Post

இறுகப்பற்று படத்திற்கு 2ஆம் நாளிலிருந்து காட்சிகள் அதிகரிப்பு

Next Post

கோலாகலமாக தொடங்கிய ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு

Next Post

கோலாகலமாக தொடங்கிய ஜென்டில்மேன் 2 படத்தின் படப்பிடிப்பு

Popular News

  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக கைக்கோத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.