• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

by Tamil2daynews
July 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

 

சமீபத்தில் வெளியிடப்பட்ட ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படத்தின்  கதைக்களத்தை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இன்னும் இரண்டு புதிய போஸ்டர்களை படக்குழு விரைவில் வெளியிடவுள்ளது. தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் கே.எஸ். சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி பேனரின் கீழ் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தை வழங்குகிறார். மேலும், நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தயாரிப்பதில் ஆர்வமுள்ள ரெடாக்டட் ஸ்டுடியோஸின் ஷான்ஜன் ஜி, இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

புதுமையான கதைகளை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் கே.எஸ். சினிஷ். இயக்குநராக ‘பலூன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் தயாரிப்பாளராக ‘டிக்கிலோனா’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த வரிசையில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சூப்பர் ஹீரோ’ உருவாகியுள்ளது.
வில்லனாக நடிப்பில் மிரட்டி, தற்போது கதாநாயகனாகவும் வெற்றி ஈட்டி வரும் அர்ஜுன் தாஸ், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக, தனது சிறப்பான நடிப்பால் கவனம் பெற்றுவரும் தேஜு அஷ்வினி நடித்துள்ளார். மேலும், ’சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தில் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். ‘லோகா – சாப்டர் ஒன்’, சமீபத்தில் வெளியான ‘பரிமளா & கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற சாண்டி மாஸ்டர் மற்றும் அர்ஜுன் தாஸ் காம்பினேஷன் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.

இந்த திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் வேணுகோபால் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர், ‘பலூன்’ திரைப்படத்தில் கே.எஸ். சினிஷிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். கதையின் மீதான நம்பிக்கை, தெளிவான திட்டமிடல் என விக்னேஷின் அணுகுமுறை படக்குழுவினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. புதிய திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் கே.எஸ். சினிஷ், இதற்கு முன்பு ‘டிக்கிலோனா’ மூலம் கார்த்திக் யோகியையும், தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் இயக்குநர் ராமையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். தெலுங்கில் ‘குஷி’, மலையாளத்தில் ‘ஹிருதயம்’, தமிழில் ‘ஒன்ஸ் மோர்’ உள்ளிட்ட படங்களில் மனதை வருடும் இசை கொடுத்த ஹிஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Previous Post

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

Next Post

“என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” – நடிகை நிமிஷா சஜயன்!

Next Post

“என்ன விலை' திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை அணுகிய விதத்தை நீதிமன்றத்திற்கு நேரில் சென்ற அனுபவம் முழுமையாக மாற்றியது” - நடிகை நிமிஷா சஜயன்!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.