• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில், 90களில் நடக்கும் திரில்லர் டிராமா பரபரப்பான படப்பிடிப்பில் !!

by Tamil2daynews
October 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சசிகுமார் & லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில்,  90களில் நடக்கும் திரில்லர் டிராமா பரபரப்பான படப்பிடிப்பில் !! 

 

Vijayaganapathy’s Pictures சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில்,  கழுகு புகழ் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 90களில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பினை விரைவில் படக்குழு அறிவிக்கவுள்ளது.

கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார். விறுவிறுப்பான திரில்லர் டிரமாவாக இப்படம் உருவாகிறது.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில் கச்சிதமாகக் கொண்டுவரப் படக்குழு கடுமையாக உழைத்து வருகிறது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப்  படக்குழு படமாக்கி வருகிறது.

இயக்குநர் நடிகர் சசிக்குமார் இப்படத்தில் நாயகனாக, மாறுபட்ட வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் கவனம் ஈர்த்த லிஜோமோல்  ஜோஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். பாலிவுட் படங்களில் மிரட்டும் சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் பருத்திவீரன் சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழில் பல பிரமாண்ட படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றிய பாண்டியன் பரசுராம், முதல் முறையாக Vijayaganapathy’s Pictures சார்பில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படத்தினைத் தயாரிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படப்பின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் தலைப்பு, டீசர் , டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம் 
தயாரிப்பு நிறுவனம் – Vijayaganapathy’s Pictures
தயாரிப்பாளர் – பாண்டியன் பரசுராம்
இயக்கம் – சத்ய சிவா
இசை – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – NS உதயகுமார்
எடிட்டர் – ஶ்ரீகாந்த் NB
Previous Post

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள நாக்ஸ் ஸ்டுடியோஸ்

Next Post

டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பால் சல்மான் கான் & கத்ரீனா கைப் மகிழ்ச்சி

Next Post

டைகர் 3’ டிரைலருக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்பால் சல்மான் கான் & கத்ரீனா கைப் மகிழ்ச்சி

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.