• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்: ‘ரா .. .ரா .சரசுக்கு ராரா…’ படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

by Tamil2daynews
October 26, 2023
in சினிமா செய்திகள்
0
லோகி ஒரு திரைச் சித்தன்! மன்சூர் அலிகான் புகழாரம்!!
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம்; இது வயது வந்தவர்களுக்கான படம்: ‘ரா .. .ரா .சரசுக்கு  ராரா…’ படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படை!

லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து ‘ரா..ரா.. சரசுக்கு ரா..ரா..’ என்றொரு படம் உருவாகி இருக்கிறது. இது ஒரே இரவில் நடக்கும் கதை.படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இயக்கியிருப்பவர் கேஷவ் தெபுர். படத்திற்கு இசை ஜி. கே. வி , ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்.

இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,சாரா, ஜெயவாணி, அக்ஷிதா,விஜய் பிரசாத், ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் கதை?

யதேச்சையாக நடந்த ஒரு கொலையில் மூன்று பெண்கள் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்க அவர்கள் படும் சிரமங்களைச் சொல்கிறது கதை. பரபரப்பாகவும் காமெடியாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இப்போது பரவி வரும் கால்பாய் கலாச்சாரத்தால் ஏற்படும் சிக்கல்கள் நகைச்சுவையுடன்  சொல்லப்பட்டுள்ளன.

பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் நிறைந்து க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்.
படத்தில் லேடீஸ் ஹாஸ்டலில் இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளையும் , சுதந்திரமான காட்சிகளையும் பார்த்த சென்னை மண்டல அதிகாரி இந்த படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் தர முடியாது என்று சொல்லிவிட்டார் அதனால் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு சென்று அறுவது கட்களோடு ஏ சர்டிபிகேட் வாங்கினோம்.
படம் பற்றித் தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமியிடம் கேட்டபோது….
 ” இந்தப் படத்தின் கதை பிடித்துப் போனதால் தான் நான் தயாரிக்க முடிவெடுத்தேன். படத்தில் சமகாலத்தைச் சித்தரிக்கும்  காட்சிகள் உள்ளன.இக்காலத்தின் கலாச்சாரத்தையும் இளைஞர்களின் மன உணர்வுகளையும் சொல்லத்தான் வேண்டும்.அப்படிப்பட்ட கதையாகத்தான் இது உருவாகியுள்ளது.இயக்குநர் கேட்டபடி நடிப்புக் கலைஞர்கள் ஆகட்டும் தொழில்நுட்ப வசதிகளாகட்டும் அனைத்தையும் நான் செய்து கொடுத்தேன்.அதன்படியே இந்தப் படம் உருவாகி உள்ளது.
இந்தப் படம் வயது வந்தவர்களுக்கான ஒரு படம் தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள்தான் பார்க்க வேண்டிய படம். இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பார்க்கலாம். இப்போது வருகிற படங்கள் யூஏ சான்றிதழ் பெற்றுக் கொண்டு  குடி, புகை,கொலை, குத்து  வெட்டு, ரத்தம் , ஆபாசம் எல்லாம் கலந்து வெளி வருகின்றன. படத்தின் தரம் தெரியாமல் சிறுவர்களை அழைத்துப் போகின்ற கொடுமை நடக்கிறது.படத்தைப் பார்க்க ஆரம்பித்த பிறகு குழந்தைகளுடன் சென்ற பெற்றோர் தர்ம சங்கடத்தில் நெளிகிற நிலைமையை நாம் பார்க்கிறோம். ஆனால் நாங்கள் “இது ஒரு ஏ படம்” தான் என்று சொல்லியே விளம்பரப்படுத்துகிறோம். சிறுவர்கள் இந்தப் படத்திற்கு வர வேண்டாம் .இது அனைவருக்குமான படம் அல்ல.பொய் சொல்லி ஏமாற்றுவது மிகவும் தவறு. அதில் எங்களுக்கு விருப்பமில்லை.”என்கிறார் தயாரிப்பாளர்.
Previous Post

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

Next Post

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

Next Post
லோகி ஒரு திரைச் சித்தன்! மன்சூர் அலிகான் புகழாரம்!!

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை அசத்தியுள்ளது டிஸ்னி + ஹாஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.