• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

by Tamil2daynews
November 18, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

 

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சுயாதீன பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கல்ட் டிஜிட்டல் ஒரே நாளில் இரண்டு தமிழ் திரைப்பட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது!

இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் படைப்புகளை உருவாக்கி வரும் சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷியின் கல்ட் டிஜிட்டல் நிறுவனம், கூடு மற்றும் ஆக்டோபஸ் ஆகிய இரண்டு புதிய தமிழ் திரைப்படங்களுடன் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது. மேலும், 2026- 2027 ஆம் ஆண்டிற்கான திட்டத்தையும் உருவாக்கி வருகிறது.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு முக்கியமான தமிழ் படைப்புகளை இந்நிறுவனம் அறிவித்தது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கைமூன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் கூடு திரைப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸான ‘ஆக்டோபஸ்’ நவம்பர் 27ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

அடுத்தடுத்து வெளியான இந்த இரண்டு அறிவிப்புகளும், சுயாதீன திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகத் தொடங்கிய கல்ட் டிஜிட்டல், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் தளங்களுக்கு ஏற்ற தனித்துவமான கதைகளை உருவாக்கி, தயாரிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.

கடந்த சில ஆண்டுகளாக ஜெயின் மற்றும் ஜோஷி இணைந்து பல்வேறு திரையுலகங்களில் பாராட்டத்தக்க படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய தகடக் 2, தோண்டி சாம்ப்யா ஏக் பிரேம் கதா, தமிழ் வரலாற்றுப் பின்னணியில் உருவான ஆகஸ்ட் 16, 1947, உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான மலையாளத் திரைப்படமான கெட்-செட் பேபி, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அனந்த் மகாதேவன் உடன் இணைந்து உருவாக்கிய புலே, தேத் பீகா சமீன் மற்றும் சமீபத்தில் வெளியான மராத்தித் திரைப்படமான துஜ்யா அய்லா உள்ளிட்டவை இவர்கள் தயாரிப்பில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்இரண்டு முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுஜய் தஹாகே இயக்கத்தில் உருவாகும் ரக்தஃபல், ஜோயல் விஜய் இயக்கும் தமிழ் திரைப்படமான கூடு மற்றும் தமிழ் வெப் சீரிஸான ஆக்டோபஸ் ஆகியவை அடுத்து வெளியாகவுள்ளன. மேலும், இந்நிறுவனம் தயாரித்துள்ள Save The God என்ற குறும்படம், இந்த ஆண்டு கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இயக்குநர் ரவி சங்கர் கௌஷிக் இயக்கத்தில், சுபர்ன் வர்மாவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தித் திரைப்படமான Aanch படத்தையும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம் தயாரிக்கிறது. இதுமட்டுமல்லாது, இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றின் ஆதரவுடன், நடிகர்கள் பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஐந்து திரைப்படங்கள் மற்றும் ஒரு பிரம்மாண்டமான வெப் சீரிஸை கல்ட் டிஜிட்டல் தயாரித்து வருகிறது.

இதுபற்றி திரைப்படத் தொழில்முனைவோர் மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறியதாவது, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியத் திரைப்படத் தயாரிப்புத் துறையின் எதிர்காலத்தை திரைப்படத் தொழில்முனைவோரான தயாரிப்பாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். கதை சொல்லும் திறனுடன், வணிக நோக்கம், பார்வையாளர்களைப் பற்றிய புரிதல் மற்றும் நல்ல கதைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர்களே எதிர்காலத் திரைப்படத் துறையை வழிநடத்துவார்கள்.

கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தில், ஒவ்வொரு படைப்புக்கும் பொருத்தமான கதை, சரியான படைப்பாளர் மற்றும் சரியான பார்ட்னரை அடையாளம் கண்டு, புதிய தலைமுறை பன்மொழி உள்ளடக்கத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி வருகிறோம். எங்களது அணுகுமுறை என்பது கூட்டாண்மை மற்றும் சந்தையை மையமாகக் கொண்ட திட்டமிடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த கதைகளை தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒன்றிணைத்து, பல்வேறு மொழிகள், பிராந்தியங்கள் மற்றும் பார்வையாளர்களைக் கடந்து பயணிக்கக்கூடிய படைப்புகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.

தற்போது, ஏற்கெனவே செயல்பட்டு வரும் மொழிச் சந்தைகளைக் கடந்து குஜராத்தி திரைப்படத் துறையிலும் நுழைய கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அத்துறையைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அடுத்தகட்டமாக ஆறு முதல் எட்டு திரைப்படங்களை உருவாக்குவதற்கான பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், கதைகளுக்கும் கதை சொல்லிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிறுவனமாக தனது இருப்பை மேலும் வலுப்படுத்த கல்ட் டிஜிட்டல் திட்டமிட்டுள்ளது.

கல்ட் டிஜிட்டல் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நவம்பர் 13 என்பது வெறும் இரண்டு படைப்புகளின் அறிவிப்பு வெளியான நாள் மட்டுமல்ல! அதன் வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த அத்தியாயம் தொடங்கிய நாளாகவும் அமைந்துள்ளது.

Previous Post

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Next Post

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

Next Post

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

Popular News

  • பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பக்கத்து வீட்டுக்காரர்களே துப்பறிவாளர்களாக மாறினால் என்ன நடக்கும்? விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆக்டோபஸ்’ வெப் தொடரின் டிரெய்லர் – நவம்பர் 27 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

November 18, 2026

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’ – இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது! 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியீடு!

November 18, 2026

தமிழில் அடுத்தடுத்து இரண்டு படைப்புகள்… அசுர வளர்ச்சியில் கல்ட் டிஜிட்டல்

November 18, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

November 18, 2026

நடிகர் இனிகோ பிரபாகர் நடிக்கும் ‘மின்னும் ஓர் இரவு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

November 18, 2026

துல்கர் சல்மானின் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ (AOT) திரைப்படம் – சென்னையில் நடைபெற்ற தமிழ் பத்திரிகையாளர் சந்திப்பு!

November 18, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.