• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

by Tamil2daynews
October 31, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

 

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 – காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது,

“எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

Previous Post

சென்டிமென்ட் ஆக்சன் திரில்லர் சப்ஜெக்டில் YSIMY புரொடக்ஷன்ஸ் ( YSIMY Productions ) தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’

Next Post

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: ‘ரா ..ரா .சரசுக்கு ராரா…’ பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் பேச்சு!

Next Post

வெளிப்புறப் படப்பிடிப்பில் லஞ்சம் கேட்கும் காவல்துறையினர்: 'ரா ..ரா .சரசுக்கு ராரா...' பட விழாவில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே ராஜன் பேச்சு!

Popular News

  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.