யூத் – விமர்சனம்

யூத் – விமர்சனம் 

எதிர்பார்த்து வருவது காதல் இல்லை, எதிர்பார்க்காமல் வருவதுதான் உண்மையான காதல் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

நாயகன் ஒரு நடுத்தரக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அப்பா ஒரு பேக்கரிக்கடை வைத்து இருக்க்கிறார். அம்மா ஹவுஸ் ஒயிப். நாயகனுக்குப் படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. பத்தாவது படிக்கும் போதே சராசரிக்கும் குறைவான மார்க்கே வாங்கி ஜஸ்ட் பாஸ் தான் ஆகி இருக்கிறான். இருந்தாலும் தன் மகனை ஒரு பெரிய பிரைவேட் ஸ்கூலில் சேர்க்கிறார்கள். நாயகனின் அம்மாவுக்கு தன் மகன் படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால் நாயகனுக்குப் படிப்பில் ஆர்வம் இல்லை. காதலில் தான் ஆர்வம்.

தான் அழகு இல்லையோ? தன்னை யாரும் கவனிக்க மாட்டார்களோ? என்ற தாழ்வு மனப்பான்மையில் நாயகன் இருக்கிறார். பள்ளியில் படிக்கும் பெண்ணைக் காதலித்த்து காலேஜில் அதே காதலைத் தொடர்ந்து அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகனின் லடசியம் (ஆஹா, இதுவல்லவோ லடசியம்?)

பள்ளியில் நாயகனை எந்தப் பெண்ணுமே கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பில் இருக்கும் நாயகனை ஒரு பெண் காதலிக்கிறார். அவருக்கும், பள்ளியில் படிக்கும் மாணவிக்கும் காதல் வருகிறது. இருவரும் காதலிக்கிறார்கள். திடீர் என அந்தப் பெண்ணின் பாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்று தகவல் வர அந்தப் பெண் பாட்டியைப் பார்க்க ஊருக்குப் போகிறாள்.
Youth' movie review: Ken Karunaas shines in a cheeky, harmless coming-of-age entertainer - The Hindu

இந்த சமயத்தில் நாயகனிடம் இன்னொரு பெண் தன் காதலை வெளிப்படுத்துகிறார். இதற்கும் நாயகன் ஓகே சொல்லி விடுகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாகப் பழகுவதைக் கண்ட நாயகனின் முதல் காதலி பிரேக்கப் செய்து விடுகிறாள்.

நாயகன் மனம் உடைந்து இருக்கும் தருணத்தில் மூன்றாவதாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது, அவளிடம் நாயகன் காதலை சொல்லும்போது அவள் நாயகனிடம் இது காதல் இல்லை, வெறும் நட்பு தான் என்று சொல்லி விடுகிறாள்.

நாயகன் உடைந்து போகிறான். இதற்குப்பின் இவரது காதல் கனவு என்ன ஆச்சு? பள்ளியில் படித்து பாஸ் ஆனானா? என்பது மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக கென் கருணாஸ் கச்சிதமாக நடித்திருக்கிறார். வைகாசி பொறந்தாச்சு பிரசாந்த் போல இளம் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார். முக பாவனை, நடன அசைவுகள், குரல் அனைத்தும் அருமை.

நாயகிகள் ஆக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில் குமார், பிரியன்சி யாதவ் மூவரும் நடித்திருக்கிறார்கள். அழகு, இளமைத்துள்ளல், நடிப்பு அனைத்தும் ஓக்கே ரகம்.

நாயகனின் அப்பாவாக வரும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு அதிக வாய்ப்பில்லை. மிகத்திறமையான நடிகருக்கு இந்த சாதா ரோல் எதற்கு? கேரளா ஆடியன்சைக் கவர் பண்ணவா?

நாயகியின் அம்மாவாக தேவதர்சினி சிறப்பான நடிப்பு. ஆசிரியையாக வரும் நளினியும் பரவாயில்லை.

நாயகனின் நண்பர்களாக வரும் நால்வரும் கவனம் ஈர்க்கிறார்கள்.
Youth Movie Review: A Refreshing Coming-of-Age Tale Film
முதல் பாதி கலகலப்பாக, ஜாலியாகப் போகிறது. பின் பாதி எமோஷனல் டிராமா.ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் அருமை. ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. பின்னணி இசை ஓக்கே ரகம்.கலகலப்பான, ஜாலியான முதல் பாதி சம்பவங்கள்.நடுத்தர மக்களின் மனதைத் தொடும் வகையில் அமைக்கப்பட்ட சில செண்டிமெண்ட் காட்சிகள், சில வசனங்கள் அருமை.கலர்புல்லான ஒளிப்பதிவு. மொத்தப் படத்தையும் தன் ஒத்த இசையால் தாங்கிப் பிடித்த ஜி.வி யின் இசை, பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்.படிப்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திய விதம்.இன்ஸ்டா பிரபலம், யூட்யூப் பிரபலம் என இயக்குனர் கண்ட்டெண்ட் கிரியேட்டர்களைப் படத்தில் யூஸ் செய்த விதம்.இண்ட்டர்வெல் பிளாக் சீன், க்ளைமாக்ஸ் சீன் இரண்டுமே ஆடியன்சின் மனதில் நிற்கும் அளவு கச்சிதமாய் அமைந்தது.நாயகன் ஒரு பாடலில் சிங்கிள் ஷாட்டில் பிரமாதமாக ஆடும் லெங்க்தி ஷாட் அபாரம்.புதிதாக வரும் இயக்குனர்களுக்கு புதிய இயக்குனர் வரவான கென் முன்னுதாரனமாக திகழ்கிறார்.என்னதான் இருந்தாலும் ஒரு பிள்ளைக்கு தாய் தகப்பன் முக்கியம். என்கிற வலியை இறுதியில் உணர்த்துகிறார். மொத்தத்தில் இந்த யூத் காதல் இல்லாத தாய் தந்தையரின் பாசம்.
Next Post

Recent News

error: Content is protected !!