• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

by Tamil2daynews
November 26, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜியோ மாமி விருது பெற்ற பிரவீன் கிரி இயக்கத்தில் அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மும்பையை பின்னணியாக கொண்ட விறுவிறுப்பான திரைப்படம் ‘மான்குர்த்’ வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

 

பல்வேறு விருதுகளை பெற்ற குறும்படங்களை இயக்கியுள்ள பிரவீன் கிரி, இயக்குநர் இமயம் திரு பாரதிராஜா முதன்மை வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ஒன்றிலும் பணியாற்றி இருக்கிறார்.

அவரது ‘மான்குர்த்’ திரைப்படம் மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.  அங்கு வசிக்கும் இரண்டு சாதாரண சிறுபான்மையினர் ஒரு அசாதாரண அரசியல் விளையாட்டில் அவர்களுக்கே தெரியாமல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இடைத்தேர்தலை முன்னிட்டு ஒரு அரசியல் கட்சி செய்யும் சதியில் முகமதும் அவரது மகள் நிஷாவும் பலிகடா ஆகிறார்கள். என்ன செய்வது என்று அவர்கள் தவிக்கும் நிலையில், நல்லெண்ணம் கொண்ட தலைவர் ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். வஞ்சகர்கள் வலையில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதை பரபரப்பாக சொல்லும் வகையில் ‘மான்குர்ட்’ உருவாகி உள்ளது.
மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இப்படத்திற்கு ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார், விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ப்ரியன் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்க, ரிகேஷ் குமார் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ‘மேதகு’ புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர். பாரதி கோலப்பன், எம்.ராஜா மற்றும் அம்மு பைரவி ஆகியோர் முக்கிய பங்களித்துள்ளனர். பன்முகத்தன்மை மிக்க ‘மான்குர்த்’ கதையில் தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ள நிலையில் பன்மொழித் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன  திரைப்படமாக தயாராகியுள்ள ‘மான்குர்த்’, உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடபட இருக்கிறது.

Previous Post

பிரைம் வீடியோவில் தமிழ் திகில் திரைப்படமான தி வில்லேஜ் சீரிஸின் சிறப்புக் காட்சி சென்னையில் நடைபெற்றது !!

Next Post

“டங்கி” டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றிய ரசிகர்களின் உற்சாகத்துடன் களைகட்டியது #AskSrk அமர்வு !

Next Post

"டங்கி" டிராப் 2 லுட் புட் கயாவைப் பற்றிய ரசிகர்களின் உற்சாகத்துடன் களைகட்டியது #AskSrk அமர்வு !

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.