• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கல்கி 2898 AD@ டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின்..!

by Tamil2daynews
December 31, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கல்கி 2898 AD@ டெக்ஃபெஸ்ட்:  ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின்..!

 

மும்பையில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் ‘டெக்ஃபெஸ்ட்’ ( Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் ‘கல்கி 2898 AD’ படத்தின் இயக்குநரான நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, திரையுலகில் ‘டார்லிங்’ என அன்புடன் அழைக்கப்படும் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸிற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். பிரபாஸின் குரலை தொலைபேசி மூலம் கேட்டபோது, அங்கு கூடி இருந்த மாணவர்கள் உற்சாகமாய் குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸை மாணவர்களிடம் உரையாட வைத்தார். இதனால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். மாணவர்கள் மற்றும் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த போது கலந்துரையாடல் நிகழ்வு,  உற்சாகத்தின் உச்சத்தை எட்டியது.
எதிர்பாராத இந்த பரபரப்பான தொலைபேசி அழைப்பை விட, ‘டெக் ஃபர்ஸ்ட்’ விழா சிறப்பாக நடைபெறுவதற்கு வேறு சில அம்சங்களும் இதன் போது இடம்பெற்றது. இயக்குநர் நாக் அஸ்வின் மாணவர்களுடன் உரையாடி, ‘கல்கி 2898 ‌AD’ படத்தில் இடம்பெற்ற பல்வேறு சிறப்பம்சங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் அந்த படைப்பை உருவாக்குவதன் பின்னணியில் உள்ள சிக்கலான  செயல்முறை குறித்தும், அதனை விளக்கும் வகையிலான வசீகர வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

‘கல்கி 2898 AD’ வைஜெயந்தி மூவிஸின் வித்தியாசமான சினிமா முயற்சியாகும். இதில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம்… அதன் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுடன் சினிமாவின் எல்லைகளை மறுவரையறை  செய்யவுள்ளது.

2024 ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ‘காமிக்-கான்’-ல் திரையிடப்பட்டப் போது.. அற்புதமான வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் இந்த அற்புதமான சினிமா அனுபவத்தை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் அற்புதமான காட்சி மற்றும் கதை சொல்லும் பாணியை விவரிக்கிறது. ‘கல்கி 2898 AD’ ஒரு குறிப்பிடத்தக்க சினிமா பயணமாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அதிநவீன தொழில்நுட்பம்… அதன் நட்சத்திர நடிகர்களின் கடின உழைப்புடன் இணைந்திருப்பதால், இது திரை ஆர்வலர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாகக் காண வேண்டிய படைப்பாக இருக்கும்.

Previous Post

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் அபி ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘பீட்சா-4’

Next Post

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Next Post

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘அயலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

Popular News

  • #Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.