• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ – விமர்சனம்

by Tamil2daynews
January 2, 2024
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ –  விமர்சனம்

 

யூடியூப் புகழ் கோபி – சுதாகர், நடிகர்கள் முனீஷ்காந்த், சத்யமூர்த்தி, ஜார்ஜ் மரியான், நடிகைகள் யாஷிகா, ரித்விகா,  ‘எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. த.ராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரமேஷ் வெங்கட் இயக்கியுள்ளார். கௌஷிக் க்ரிஷ் இசையமைத்துள்ளார்.

சினிமாவில் சாதிக்க விரும்பும் இளைஞர் பட்டாளம், ஐடி வேலை புரியும் இரு பெண்கள், பள்ளி மாணவர்கள், மதுப்பிரியர் ஒருவர் என வெவ்வேறு பின்புலத்தைச் சேர்ந்தவர்கள், ஆபாசத் திரைப்படம் (?!) ஒன்றை பார்ப்பதற்காக 1993ஆம் ஆண்டு முதல் பூட்டிக் கிடக்கும் திரையரங்கம் ஒன்றுக்கு வந்து சேர்கிறார்கள்.
Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2023) - IMDb

திரைப்படம் தொடங்கிய சிறிது நேரத்தில் மர்மங்களும் அமானுஷ்யங்களும் கிச்சு கிச்சு மூட்டியபடி வரிசையாக அரங்கேறுகிறது. அரண்டு போகும் இந்தக் குழு, திரையரங்கை விட்டு தப்பிக்க முயன்றாலும் மீண்டும் திரையரங்குக்குள்ளேயே வந்து சேர்கிறார்கள். இதற்கான காரணம் என்ன? பேய் பிடித்த திரையரங்கில் இந்தக் குழு மாட்டிக் கொண்டு எப்படி போராடியது, 30 ஆண்டு மர்ம முடிச்சுகளுக்கு விடை கிடைத்ததா என்பதை போராட்டத்துடன் நமக்கும் கடத்தியிருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புகழ்பெற்ற கமல்ஹாசன் வசனம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. சுவாரஸ்யம் கூட்டும் தலைப்பை தேர்ந்தெடுத்தவர்கள், படத்தில் அதைக் கடத்தியிருக்கிறார்கள்.

6 ஆண்டுகளுக்கு முன் வெளிவர வேண்டிய திரைப்படம் பல காரணங்களால் தள்ளிப்போய் தற்போது வெளியாகியிருக்கிறது. கோபி – சுதாகர், ‘எரும சாணி’ டீம்  என யூடியூபில் நாம் அன்றாடம் பார்த்து ரசிக்கும் முகங்கள் திரையில் தோன்றியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது யூடீயூப் சேனலில் ஒர்க் அவுட் ஆகும் காமெடி இங்கே பெரிதாய் எடுபடவில்லை.

1993இல் தொடங்கி திரையரங்குக்குள் இந்தக் குழு நுழையும் வரை, சிறப்பாக திகில் எஃபெக்ட் தந்து ஹைப் ஏற்றி நம்மை ஒன்ற வைக்கிறார்கள். ஆனால் காமெடி – பேய் எனும் ஜானரில் பின்னது குறைந்து முன்னது ஓவர் டோஸ் ஆகியுள்ளது.
Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu (2023) - Backdrops — The Movie Database (TMDB)சுமாரான படத்தை வாங்கி விட்டு வில்லத்தனமான ப்ரொடியூசராக முனீஷ்காந்த் ஆங்காங்கே மிரட்டுகிறார். யாஷிகா, கோபி – சுதாகர், எரும சாணி’ சேனல் புகழ் விஜய், ஹரிஜா என அனைவரும் புதிதாக பெரிதும் முயலாமல், வழக்கமாக இந்த ஜானர் படங்களுக்கு தேவையானதை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள்.

காமெடி, பேய் இரண்டில் முதல் பாதியில் காமெடி மட்டுமே கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் தரப்படும் பில்ட் அப், பேயை அறிமுகப்படுத்தியதும் புஸ்ஸ் என வடிந்துவிடுகிறது. பேய்களுக்கான ஃப்ளாஷ்பேக் எல்லாம் ‘அட போங்க பாஸ் விளையாடாதீங்க’ எனும் ரேஞ்சில் தான் இருந்தது. கொஞ்சமாவது பேய்க்கு உண்டான மரியாதையைக் கொடுத்து இரண்டாம் பாதியில் நம்மை பயமுறுத்த முயற்சித்திருக்கலாம். பேய்களில் சில பேய்கள் இரண்டாம் பாதியில் காணாமல் வேறு போகின்றன.

முதல் பாதி பிடிப்பு இல்லாமல் இரண்டாம் பாதி பல யூடர்ன்கள் போட்டு எங்கெங்கோ பயணிக்கிறது.  கௌஷிக் க்ரிஷ்ஷின் இசையில் 2 பாடல்கள் ஓகே ரகம். ஆனால் பேய்க்கதை எனும் ஜானரில் பின்னணி இசையில் மிரட்ட முயற்சித்திருக்கலாம். ஜோஷூவா ஜோசப்பின் கேமரா திரையரங்குக்குள் திகில் கூட்டி இருக்கிறது.

காமெடி -பேய் கூட்டணி ஓகே. ஆனால் பேய்க்கு உருக்கமான ஃப்ளாஷ்பேக் வைத்துவிட்டு, பின் அவர்களை ஊறுகாய் ஆக்கி காமெடி செய்யவெல்லாம் வைத்திருப்பது பெரும் அயர்ச்சிக்குள்ளாக்குகிறது.  சுயபகடி செய்வது போல் படத்தில் ஒரு பேய் படத்தை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.  படத்தின் தலைப்பை காரணத்துடன்தான் வைத்திருக்கிறார்கள்!

மொத்தத்தில் இந்த படம் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Tags: Cinema Updategopi aravindhGopi sudhakarJayaramanmunishkanthOdavum Mudiyadhu Oliyavum MudiyadhuOdavum Mudiyadhu Oliyavum Mudiyadhu movie reviewRiythvikaSudhakarTamil CinemaYashika Anand
Previous Post

‘கும்பாரி’ – விமர்சனம்

Next Post

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!

Next Post

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது “டங்கி” திரைப்படம் !!

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.