• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹார்ட் டூ ஹார்ட்: திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’, ‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’!

by Tamil2daynews
February 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹார்ட் டூ ஹார்ட்: திபு நினன் தாமஸின் மறக்க முடியாத காதல் பாடல்கள், ‘நீ கவிதைகளா’,
‘அடியே’ முதல் ‘கண்கள் ஏதோ’ வரை’!

 

திபுவின் மெல்லிசைப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாது ரசிகர்கள் மனதிலும் மறக்க முடியாத ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மெயின்ஸ்ட்ரீம் திரைப்பட இசைத்துறைக்குள் அவர் நுழைந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ளது. ‘மரகத நாணயம்’ படத்தின் ‘நீ கவிதைகளா’ பாடல் முதல், ’சித்தா’ படத்தின் சமீபத்திய சூப்பர்ஹிட் பாடலான ‘கண்கள் ஏதோ’ வரை இசை ஆர்வலர்கள் அவரது மெல்லிசையால் உடனடியாக ஈர்க்கப்பட்டனர். ’நீ கவிதைகளா’ பாடல் 2017 இல் வெளியாகி ஆறு ஆண்டுகள் கடந்து இருந்தாலும் ஸ்பாட்டிஃபையின் முதல் 10 தரவரிசைகளில் இப்போதும் உள்ளது.

குறுகிய காலத்தில் இசைத்துறையில் அவர் அற்புதமான சாதனைகளை செய்துள்ளார் என்பது அவரது டிஸ்கோகிரஃபி பார்க்கும்போதே புரியும். ‘கனா’ படத்தின் ஆல்பம் இவரை ஒரே இரவில் இன்னும் பிரபலமாக்கியது. இந்தப் படத்தின் மொத்த ஆல்பமும் ‘வாயாடி பெத்த புள்ள’ மற்றும் ‘ஒத்தையடி பாதையில்’ பாடல்கள் மூலம் 800+ மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், யூடியூப் தளத்தில் 450+ மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதேபோல, ‘பேச்சுலர்’ படத்திலிருந்து இவரது ‘அடியே’ பாடலும் இளைஞர்கள் மத்தியில் சாட்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் 100 மில்லியனுக்கும் அதிகமான ஸ்ட்ரீம்களை எட்டிய முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனையை இந்தப் பாடல் வைத்துள்ளது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இவ்வளவு அதிக பார்வையாளர்களை அடைந்த முதல் தென்னிந்திய இசையமைப்பாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் மற்றும் மியூசிக் பிளாட்ஃபார்ம்களில் இந்த சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாது, இந்தப் பாடல் 100K+ ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸாகவும் இளைஞர்கள் மத்தியில் வைரலானது. மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இவரது பாடல்கள் பல பிராந்தியங்களைத் தாண்டி பலரது இதயங்களை வென்றது. திபுவின் பாடல்கள் இசைப்பிரியர்களுக்கு மட்டுமல்லாது, தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது சமீபத்திய படைப்பான ‘சித்தா’வில் இருந்து ‘கண்கள் ஏதோ’ பாடல் தமிழ் மொழி அல்லாதவர்களையும் கூட தாளம் போட வைத்து அவர்களின் இசைப்பட்டியலில் சேர்க்க வைத்தது.

சந்தேகத்திற்கு இடமின்றி, திபு நினன் தாமஸின் இசை ரசிகர்களிடம் லூப் மோடில் கேட்க வைத்து மயக்குகிறது. அவர் இப்போது மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா & கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘மிஸ்டர். எக்ஸ்’ படம், ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஐந்து மொழிகளில் 3டியில் வெளியாகும் பான்-இந்தியப் படமான ’அஜயந்தே ரெண்டம் மோஷனம்’ (ARM) மற்றும் இன்னும் நான்கு தமிழ்ப் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

Previous Post

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்!

Next Post

நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் பான் இந்தியா படமான ‘சுயம்பு’வுக்காக குதிரை யேற்றம் கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளர் கதாநாயகி சம்யுக்தா!

Next Post

நிகில் நடிப்பில் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிக்சல் ஸ்டுடியோவின் பான் இந்தியா படமான 'சுயம்பு'வுக்காக குதிரை யேற்றம் கற்கும் பயணத்தைத் தொடங்கியுள்ளர் கதாநாயகி சம்யுக்தா!

Popular News

  • பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்ற நிவேதா தற்போது மூன்றாவது வாகோ இந்தியா ஓபன் இண்டர்நேஷனல் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று பெருமை சேர்த்தார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சிபிராஜ் தயாரித்து நடிக்கும் புதிய திரைப்படம்: ‘ஜீப்ரா’ பட இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்குகிறார்!

October 10, 2026
ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

’டோரதி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு!

October 10, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து மன்னர் தசரதராக அருண் கோவில் இடம்பெறும் புதிய போஸ்டர் வெளியானது!

October 10, 2026

மனதை வருடும் உணர்வுகளும் நகைச்சுவையும் நிறைந்த ஃபீல்குட் ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘ஹைக்கூ’வின் டிரெய்லர் வெளியானது!

October 10, 2026

பஞ்சாயத்துப்பட்டி – விமர்சனம்

October 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.