• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

”’பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

by Tamil2daynews
February 17, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

”’பர்த் மார்க்’ சாதாரண விஷயம் கிடையாது!”- இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன்!

 

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. ‘பர்த் மார்க்’ திரைப்படம் ஜெனி என்ற மிர்னா கதாபாத்திரத்தைச் சுற்றி நகரக்கூடிய கதை. படத்தில் ஏழு மாத கர்ப்பிணியாக மிர்னா நடித்துள்ளார். படப்பிடிப்பு 36 நாட்கள் நடந்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் கூறியிருப்பதாவது, “‘பர்த் மார்க்’ நிச்சயம் புது அனுபவம் உங்களுக்குக் கொடுக்கும். நம் வாழ்விலும் ‘பர்த் மார்க்’ என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுவரை பார்த்துச் சலித்த கதைகளைப் போல இல்லாமல் புதிதாக எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அப்போது தான் சுகப்பிரசவம் பற்றி விக்ரம் ஒரு விசயத்தைக் கூறினார். அதைப்பற்றி படிக்கும்போது நிறைய சுவாரஸ்யமான விசயங்கள் தெரிய வந்தது. இயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது பற்றி விரிவாகப் பேசுவதற்கு நிறைய விசயங்கள் இருந்ததால் படமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் 1990 களில் நடக்கிறது. கார்கில் போருக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பிய டேனி என்ற இராணுவவீரர், கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை தன்வந்திரி என்கிற கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார். எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் அந்த கிராமம்.

அங்கு தம்பதிகள் சந்திக்கும் மனப்போராட்டங்கள், மாற்றங்களைத் த்ரில்லர் பாணியில் சொல்லி இருக்கிறோம். இந்த கிராமத்திற்காக தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் கிராமத்தின் குறுக்கே ஒரு கிராமத்தை அமைத்தோம். ஜெனி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சரியாக மிர்னா பொருந்தினார். ஷபீரும் கடுமையாக உழைக்கக்கூடியவர். வருகிற பிப்ரவரி 23 அன்று இந்தப் படம் வெளியாகிறது. படம் பார்த்து முடித்ததும் தன் தாய் மீதும் பெண்கள் மீதும் மரியாதையை ஒவ்வொரு ஆண்மகனுக்கும் இந்தக் கதை ஏற்படுத்தும். இதைத்தான் உணர்த்த விரும்பினோம்” என்றார்.

நடிகர்கள்:
ஷபீர் கல்லாரக்கல், மிர்னா, தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர்.வரலகஹ்மி

தொழில்நுட்பக்குழு:
இயக்குநர்: விக்ரம் ஸ்ரீதரன்,
எழுத்து மற்றும் தயாரிப்பு: ஸ்ரீராம் சிவராமன், விக்ரம் ஸ்ரீதரன்,
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்,
ஒளிப்பதிவாளர்: உதய் தங்கவேல்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராமு தங்கராஜ்,
படத்தொகுப்பு: இனியவன் பாண்டியன்,
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி கண்ணத்,
கூடுதல் திரைக்கதை எழுத்தாளர்: அனுசுயா வாசுதேவன்,
ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமாஸ்,
ஒலிக்கலவை: அரவிந்த் மேனன்,
கலரிஸ்ட்/ டிஐ: பிரதீக் மகேஷ்,
விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஃபிக்ஸ் இட் இன் போஸ்ட் ஸ்டுடியோ,
தயாரிப்பு நிர்வாகி: ரவிக்குமார்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா,
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஸ்ரீராம் சிவராமன்,
லைன் புரொட்யூசர்: கார்த்தி வேல்,
புரொஸ்தெடிக்ஸ்: வினீஷ் விஜயன்,
விளம்பர வடிவமைப்பாளர்: கௌதம் ஜே,
உதவி இயக்குநர்கள்: டோனி மார்ஷல், சூர்யா விஜயகுமார்.

 

Previous Post

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

Next Post

‘எப்போதும் ராஜா’ – விமர்சனம்

Next Post

'எப்போதும் ராஜா' - விமர்சனம்

Popular News

  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரையிலிருந்து வெள்ளித்திரை வரை — “ஹபீபி” மூலம் கிடைத்த நாயகன் ஈசா!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.