• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’பர்த் மார்க்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

by Tamil2daynews
February 22, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

’பர்த் மார்க்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

 

ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் ஷபீர் கல்லாரக்கல், மிர்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பர்த் மார்க்’. இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் பேசியதாவது, “குழந்தைப் பிறப்பு முறை பற்றி இந்தப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ’பர்த் மார்க்’ என ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கக் காரணம் கதையோடு சேர்ந்த வந்த விஷயம் என்பதால்தான். இந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு விஷயமும் ‘பர்த் மார்க்’ போல எங்கள் கூடவே ஒட்டிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு 1999-ல் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மனநிலையைதான் ஷபீரின் டேனி கதாபாத்திரம் திரையில் பிரதிபலித்திருக்கும். மிர்னாவும் ஜெனி என்ற கர்ப்பிணி பெண்ணாக சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நிஜமான கர்ப்பிணியின் வயிறு, அதன் எடை போலவே உண்மையான புராஸ்தெடிக் வயிறு மிர்னாவுக்கு செய்து கொடுத்தோம். அதை வைத்துக் கொண்டே அவர் படம் முழுக்க நடந்து, ஓடி நடித்திருப்பார். அது பெரிய விஷயம். போர் வீரனுடைய மனநிலை மற்றும் கர்ப்பிணி பெண்ணின் மாற்றங்கள் என அனைத்தையும் முறையாக ரிசர்ச் செய்துதான் உருவாக்கி இருக்கிறோம் இதற்கே எங்களுக்கு ஒரு வருடம் ஆனது. படத்திற்கு விஷால் சந்திரசேகரின் இசை மிகப்பெரிய பலம். படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் கொடுக்க வேண்டும்”.

நடிகர் ஷபீர், “‘சார்பட்டா’ படம் மூலம் நீங்கள் கொடுத்த அனைத்து அன்புக்கும் நன்றி. ‘சார்பட்டா’ படத்திற்குப் பிறகு நான் முதலில் கையெழுத்துப் போட்ட படம் இது. இதன் பிறகுதான், ‘கிங் ஆஃப் கொத்தா’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் இன்னும் சில தெலுங்கு படங்களில் நடித்தேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இயக்குநர் கொடுத்த இன்புட் வைத்தே படத்தில் என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன். மிர்னாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால்தான், அவரால் இங்கு வரமுடியவில்லை. படத்தில் லிப்லாக் வைக்க வேண்டும் என்று திணிக்கவில்லை. கதைக்கு அந்த எமோஷன் தேவைப்பட்டது. நிச்சயம் படம் உங்களுக்குப் பிடிக்கும்” என்றார்.

மேடையில் இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன், ஷபீருடன் நடிகர்கள் தீப்தி, பொற்கொடி, ஒளிப்பதிவாளர் உதய் தங்கவேல், எடிட்டர் இனியவன் பாண்டியன் எனப் படக்குழுவினரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Previous Post

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவான ‘கோ’ திரைப்படம் மார்ச் 1, 2024 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது!

Next Post

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

Next Post

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.