• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ வித்தைக்காரன்’ – விமர்சனம்

by Tamil2daynews
February 24, 2024
in விமர்சனம்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ வித்தைக்காரன்’ – விமர்சனம்

பெரிய நடிகர்களுடன் காமெடியில் வலம் வந்த நடிகர் சதீஷ் நடித்திருக்கும் படம் வித்தைக்காரன்.

‘நாய் சேகர்’ திரைப்படத்தின் மூலம் கதை நாயகனாக வலம் வந்த இவர் இத்திரைப்படத்தில் வேறொரு பரிமாணத்தில் ஜொலிக்கிறார்.

காமெடி நடிகராக உலா வந்த நடிகர் சதீஷ் நாயகனாக நடித்து, இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் வித்தைக்காரன். இயக்குனர் வெங்கி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜான் பாண்டி தயாரித்துள்ளார். படத்திற்கு யுவ கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் ஈ சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தின் பெயருக்கு ஏற்ப படத்தின் நாயகனாகிய சதீஷ் ஒரு மாயாஜால நிகழ்ச்சி நடத்தும் மாயாஜாலக்காரராக வருகிறார்.

தலையில் அடிபட்டு ஒருநாள் ஞாபகத்தை இழந்த நபராக வரும் சதீஷூக்கும், தங்கம், வைரம் கடத்தும் மாரி கோல்ட், டாலர் அழகு மற்றும் கல்கண்டு கும்பலுக்கும் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் தர முயற்சிக்கும் திரைப்படமே வித்தைக்காரன்.
வித்தைக்காரன் Review: எடுபட்டதா சதீஷின் 'சீரியஸ்' முயற்சி? | Vithaikkaaran Movie Review - hindutamil.in

படத்தில் சதீஷ் மட்டுமின்றி ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்ரமணிய சிவா, மெட்ராஸ் பட புகழ் பவெல் நவகீதன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. மருத்துவமனையில் அடிபட்டு தனக்கு ஒருநாள் மட்டும் நடந்த நிகழ்வுகளை மறக்கும் நாயகனாக படத்தில் தனது கதையைத் தொடங்கும் சதீஷ், மாயாஜால நிகழ்ச்சி நடத்தியும் தங்கம், வைரம் கடத்தும் ஆனந்தராஜ், சுப்ரமணிய சிவா கும்பலை ஏன் தொடர்பு கொள்கிறார்? அந்தக் கும்பலுக்கும் சதீஷ்க்கும் இடையே என்ன தொடர்பு? என திரைக்கதை நகர்கிறது.

ஒரு காலத்தில் வில்லனாக மிரட்டிய ஆனந்தராஜ், சமீபகாலமாக காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்தப் படத்திலும் அவரை டாலர் அழகு என்ற காமெடி கலந்த வில்லனாக களமிறக்கியுள்ளார் இயக்குனர். ஆனால், டாலர் அழகு கதாபாத்திரம் முழுமையாக ரசிகர்களை ரசிக்க வைத்ததா என்றால் கேள்விக்குறி என்பதே பதில். அதேசமயம், சில இடங்களில் ஆனந்தராஜ் தனக்கே உரிய பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

தமிழ் சினிமாவின் பல பாடல்களில் தனது வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான டான்சர் ஜப்பான் குமார் இந்தப் படத்தில் ஒரு நடிகராகக் களமிறங்கியுள்ளார். ஆனந்தராஜூடன் அவர் படம் முழுக்க வந்தாலும், அவரது கவுன்டர்கள் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை என்றே கூற வேண்டும். முதல் பாதியை காமெடியாக கொடுக்க நினைத்த இயக்குனருக்கு, சில இடங்களில் சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இரண்டாம் பாதியில் பெரும்பாலான கதைக்களம் விமான நிலையத்திலே நகர்கிறது. ஒரே இடத்தில் கதைக்களம் நகர்ந்தாலும் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. 25 கோடி மதிப்புள்ள வைரத்தை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த கும்பலும் விமான நிலையத்திற்குள் சுற்றி வருகிறது.

இரண்டாம் பாதியில் படத்தின் மூன்று வில்லன்களையும் ஒரே புள்ளியில் இணைக்கும் சதீஷ், அதே விமான நிலையத்தில் மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்யும் நபராக பணியாற்றுகிறவர் என்பதை நாயகி சிம்ரன் குப்தா கண்டுபிடிக்கிறார்.
சதீஷ் மருத்துவமனைக்கு சென்று தான் சம்பாதிக்கும் பணத்தை இளம்பெண் சிகிச்சைக்காகவும் வழங்குவதை சதீஷ் மூலமாகவே அறிந்தும் கொள்கிறார் நாயகி. உண்மையில் சதீஷ் மாயாஜாலம் நிகழ்ச்சி நடத்தும் மாயக்காரரா? விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் நபரா? அந்தக் கடத்தல் கும்பலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? விமான நிலையத்தில் சிக்கிய 25 கோடி வைரம் யார் கையில் சிக்கியது? சதீஷ் பண உதவி செய்யும் அந்த இளம்பெண் யார்? போன்ற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைக்கிறது.

படத்தில் சதீஷ், ஆனந்தராஜ், ஜப்பான் குமார், ஜான் விஜய், மாரிமுத்து, சாம்ஸ் என நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும் சிரிப்பலையை ஏற்படுத்தினார்களா என்றால் அது மிஸ்ஸிங் என்றே சொல்ல வேண்டும். ஆனந்தராஜ், ஜப்பான்- குமார், சதீஷ் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகளை இன்னும் ரசிக்கும் வகையில் அமைத்திருக்கலாம்.

கதைநாயகனாக நடிக்கும் படத்திற்காக சதீஷ் மட்டுமே கஷ்ட  பட்டுருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மற்ற நடிகர், நடிகைகளை வேலை வாங்குவது இயக்குனரின் வேலை மட்டுமே,ஆனால் அதுவும் இயக்குனர் சரியாக செய்யவில்லை ஒருவேளை இயக்குனர் நடிப்பாசையில் இதையெல்லாம் மிஸ் செய்து விட்டாரோ என்றே தோன்றுகிறது.லோகேஷ் கனகராஜ் உதவியாளர் என்றால் நம்ப முடியவில்லை.

அதேபோல முதல் பாதியில் மாயமான தங்கம் எங்கே சென்றது என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர் வெங்கட் பரத்தின் சுனாமிகா பாடல் இதமாக இருந்தது. படத்திற்கு தேவையில்லாமல் பாடல்களை வைக்காததற்கு இயக்குநரை பாராட்டலாம். சில சறுக்கல்கள், கேள்விகளைத் தவிர்த்துவிட்டு ஆபாசம், இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் குடும்பங்களுடன் சென்று பார்க்கும் வகையில் அமைந்துள்ள வித்தைக்காரன் படத்தைப் பாராட்டலாம்.

மொத்தத்தில் இந்த வித்தைக்காரனின் வித்தை ரசிகர்களை கவரும்.
Tags: Sathishsimran guptavithaikaran movievithaikaran movie reviewvithaikaran movie review in tamil
Previous Post

ஸ்டார்ட் அப் துறை பின்னணியில் கோபி சுதாகர் கலக்கும் கோடியில் இருவர் !!

Next Post

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

Next Post

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.