• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ், இயக்குநர் அசோக் தேஜாவுடன் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ சீரிஸில் இருந்து முதல் முறையாக, சிவசக்தியாக தமன்னா பாட்டியாவின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது!

by Tamil2daynews
March 9, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மது கிரியேஷன்ஸ் & சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ், இயக்குநர் அசோக் தேஜாவுடன் இணைந்து அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் பல மொழி திரைப்படமான ’ஒடேலா 2’ சீரிஸில் இருந்து முதல் முறையாக, சிவசக்தியாக தமன்னா பாட்டியாவின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது!

 

ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர்ஹிட்டான ‘ஒடேலா ரயில்வே ஸ்டேஷன்’ படத்தின் அடுத்த சீரிஸான ‘ஒடேலா2’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு காசியில் பூஜையுடன் தொடங்கியது. சம்பத் நந்தி திரைக்கதையில், அசோக் தேஜா இயக்கும் இப்படத்தை மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் பேனர்களின் கீழ் டி மது தயாரிக்கிறார்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிவசக்தியாக தமன்னா இடம்பெற்றிருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகை தமன்னா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்பது போஸ்டர் பார்க்கும்போதே தெரிகிறது. அடர்ந்த முடிகளுடன் நாக சாதுவைப் போல உடையணிந்து, ஒரு கையில் புனிதத் தடியும், மற்றொரு கையில் டமாருவையும் ஏந்தி, நெற்றியில் மஞ்சள் பொட்டு, குங்குமத்துடன் சிவசக்தியாக முதல் பார்வை போஸ்டரில் தோற்றமளிக்கிறார் தமன்னா.Image

காசி தெய்வத்தை நோக்கி அவள் கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்வதை இதில் பார்க்கலாம். ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்ற இந்த முதல் பார்வை நிச்சயம் சிவராத்திரிக்கான ஒரு ஸ்பெஷல் ட்ரீட் என்றே சொல்லலாம். ’ஒடேலா 2’ கதை ஒரு கிராமத்தை மையமாகக் கொண்டது. அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம், மரபுகள் மற்றும் அதன் உண்மையான மீட்பர் ஒடேலா மல்லண்ண சுவாமி தனது கிராமத்தை தீய சக்திகளிடமிருந்து எப்போதும் எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை சுற்றி இதன் கதை இருக்கும்.

பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ஹெபா படேல் மற்றும் வசிஷ்டா என் சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஎஃப்எக்ஸ் திரைப்படத்தில் முதன்மையானதாக இருக்கும். அதே நேரத்தில் ‘ஒடேலா 2’வில் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் உள்ளனர்.

சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, ’காந்தாரா’ புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ராஜீவ் நாயர் இதன் கலை இயக்குநர். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கானக் கதையாக இந்தப் படம் உள்ளதால் தேசிய அளவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள்: தமன்னா பாட்டியா, ஹெபா பட்டேல், வசிஷ்டா என் சிம்ஹா, யுவா, நாக மகேஷ், வம்ஷி, ககன் விஹாரி, சுரேந்தர் ரெட்டி, பூபால் மற்றும் பூஜா ரெட்டி

தொழில்நுட்பக் குழு:
தயாரிப்பாளர்: டி மது,
திரைக்கதை: சம்பத் நந்தி,
பேனர்: மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ்,
இயக்குநர்: அசோக் தேஜா,
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன். எஸ்,
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்,
கலை இயக்குநர்: ராஜீவ் நாயர்,
மக்கள் தொடர்பு: ரேகா,
மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ

Previous Post

ஜே. பேபி – விமர்சனம்

Next Post

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!

Next Post

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • திரு.கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.