• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில், “ஃபேமிலி படம்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது !!

by Tamil2daynews
March 25, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர்  செல்வா  இயக்கத்தில், “ஃபேமிலி படம்”
படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது !! 

 

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும், அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான  “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள்,  அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை, அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், RJ பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். KP நந்து கலை இயக்கம் செய்கிறார். R சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். பெரும் பொருட்செலவில் UK Creations சார்பில் K பாலாஜி தயாரிக்க, R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Previous Post

V. C.வடிவுடையான் இயக்கி கதையின் நாயகனாக நடிக்கும் ” குத்தா ” பத்து மொழிகளில் தயாராகிறது.

Next Post

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில், மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

Next Post

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில், மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.