• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது !!

by Tamil2daynews
April 9, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது !! 

தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான “பிரேமலு” ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. கிரிஷ் A D  இயக்கத்தில் உருவான  இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும்  பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது. ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள். சச்சின் ரீனுவை ஒருதலையாகக்  காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப்பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். “ஜேகே”யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.  மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில்  ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்,  கலக்கலான ரொமான்ஸ் காமெடி  திரைப்படமான “பிரேமலு” படத்தைக் கண்டுகளியுங்கள்.
Previous Post

இவி.கணேஷ்பாபு இயக்கி, நடித்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு குறும்படம்

Next Post

அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான ‘புஷ்பா2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது!

Next Post

அல்லு அர்ஜூன் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியான 'புஷ்பா2: தி ரூல்’ டீசர், இணையம் முழுவதும் ஆகிரமித்து இருக்கிறது!

Popular News

  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆதிமூலம் கிரியேஷன்ஸ் முதல் தயாரிப்பில் KPY பாலா கதாநாயகனாக அறிமுகம்! இயக்குநர் ஷெரீஃபின் இயக்கத்தில் உணர்ச்சிமிகு ‘Feel Good’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் ஆட்சி செய்வது ஏன்..?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.