• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

by Tamil2daynews
October 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமென்ட்,வீடு என அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகிறது.Imageஇப்படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பரத், ராஜேஷ் மாதவன், சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), முனீஷ்காந்த், சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குநர் விருமாண்டி முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.

‘காதல்’, ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’ , ‘காளிதாஸ்’ படத்தின் இரு பாகங்கள் என அழுத்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பரத், இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘மகேஷிண்டே பிரதிகாரம்’, ‘ந்னா தான் கேஸ் கொடு’ உள்ளிட்ட மலையாளப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ராஜேஷ் மாதவன், ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலா பொலேலோ’ பாடலில் தோன்றி தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர். இவர்களின் மாறுபட்ட நடிப்புப் பாணிகள் இணைவது இப்படத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகையும், தமிழில் ‘புல்லட்’ படத்தில் நடித்தவருமான சிவேஷ்தா ராஜ் (வைஷாலி ராஜ்), ‘யூத்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மீனாட்சி தினேஷ் மற்றும் ‘மார்கழி திங்கள்’, ‘திரௌபதி 2’ படங்களில் நடித்த ரக்‌ஷனா இந்துசூடன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த முனீஷ்காந்த், குணச்சித்திர நடிகை சுஜிதா, கட்டெறும்பு ஸ்டாலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Imageஇப்படத்தின் ஒளிப்பதிவை S.R. சதீஷ் குமார், படத்தொகுப்பை அருள் E. சித்தார்த் மேற்கொள்கின்றனர். கலை இயக்கம் – டான் பாலா, சண்டைப் பயிற்சி – தினேஷ் காசி, ஒப்பனை – மணி, ஆடை வடிவமைப்பு – லாவண்யா தேசிகன், விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக், தயாரிப்புக் கட்டுப்பாடு – சேது பாண்டியன், ஆடைப் பொறுப்பு – விக்னேஷ், புகைப்படம் – சிவா ஆகியோர் கவனிக்கின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, மனதை நெகிழ வைக்கும் பாசம், உறவுகளின் ஆழத்தை உணர்த்தும் சென்டிமென்ட் எனச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்தக் குடும்பமும் கொண்டாடும் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலகலப்பான திரைக்கதையும், திறமையான நட்சத்திரக் கூட்டணியும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமையவுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கேரளாவின் எழில்மிகு ஆலப்புழா பகுதிகளில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் – மலையாளத் திரையுலகின் திறமையான கலைஞர்கள் இணையும் இந்தப் புதிய கூட்டணி, ரசிகர்களுக்குச் சிரிப்பும் நெகிழ்ச்சியும் நிறைந்த திரையரங்கக் கொண்டாட்டத்தை வழங்கத் தயாராகிறது!

இப்படத்தின் தலைப்பு மற்றும் கூடுதல் அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Previous Post

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!

Next Post

ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

Next Post

ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

Popular News

  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நடிகை சமந்தா ரூத் பிரபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.