• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“‘ரோமியோ’ அனைவரின் ரசனைக்கும் ஏற்ற மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு படம்”- நடிகை மிருணாளினி ரவி!

by Tamil2daynews
April 10, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“‘ரோமியோ’ அனைவரின் ரசனைக்கும் ஏற்ற மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு படம்”- நடிகை மிருணாளினி ரவி!

 

‘ரோமியோ’ படத்தின் ட்ரெய்லரில் நடிகை மிருணாளினி ரவியின் நடிப்பைப் பார்த்து கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது சினிமா கரியரில் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரங்களையே தொடர்ந்து அவர் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் மிருணாளினி கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘ரோமியோ’ திரைப்படம் நாளை (ஏப்ரல் 11) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தில் தனது நடிப்புக்கு ரசிகர்களின் வரவேற்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் மிருணாளினி.

படம் குறித்து நடிகை மிருணாளினி ரவி கூறுகையில்,
சில கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு எளிதாகவும் அதேசமயம் சவாலாகவும் இருக்கும். ‘ரோமியோ’வில் எனது கதாபாத்திரம் இதுபோன்றதுதான். என்னுடைய நிஜ கதாபாத்திரம் இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்கு அப்படியே மாறுபட்டது. பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும். இயக்குநர் விநாயக் வைத்தியானந்தன் என்னிடம் கதையை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் வலுவான எமோஷனல் அடித்தளமும் இதில் இருக்கிறது என்பது புரிந்தது.

கூடுதலாக, திறமையான நடிகர் விஜய் ஆண்டனி சாருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். ஆரம்பத்தில் தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், யோகி பாபு மற்றும் பல அனுபவமிக்க நடிகர்களுடன் பணியாற்றப் போகிறேன் என்பது பதட்டமாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பில் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது. ’ரோமியோ’ ஒரு மகிழ்ச்சியான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இது அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்” என்றார்.

’ரோமியோ’ படத்தை விநாயக் வைத்தியநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். முதன்மை கதாபாத்திரங்களில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பரத் தனசேகர் இசையமைத்திருக்க, ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Previous Post

‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

Next Post

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர் இரண்டு வெவ்வேறு தளங்களில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ‘ஒரு நொடி’ பட குழுவினர்

Next Post

ஒரே நாளில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ஒரு நொடி படக்குழுவினர் இரண்டு வெவ்வேறு தளங்களில் டீசர் மற்றும் டிரைலரை வெளியிட்ட ‘ஒரு நொடி’ பட குழுவினர்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.