• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி

by Tamil2daynews
April 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில், தனித்துவமான நடிப்பின் மூலம் கவனத்தைக் கவரும் நிவின் பாலி

 

நிவின் பாலி, பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ ஏப்ரல் 11ஆம் தேதியன்று வெளியானது.  இந்திய திரையுலகின் பரந்த பரப்பில் திறமையான நட்சத்திரங்களின் பங்களிப்பால் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக நிவின் பாலியின் தனித்துவமான நடிப்பு.. கவனத்தை கவர்கிறது. ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் அவரது திரை தோற்றம்… அவர் ஆற்றல்மிக்க  நடிகர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அத்துடன் மட்டுமல்லாமல் இத்திரைப்படம்.. சினிமா ரசிகர்களின் ரசனையை புதிய உயரங்களுக்கு உயர்த்துகிறது. இந்தத் திரைப்படம், 70 கள் மற்றும் 80களில் ஆர்வமுள்ள திரைப்பட தயாரிப்பாளர்களின் வாழ்வியலை பற்றியதாகும். சினிமா ரசிகர்களின் மையமாக திகழும் கோடம்பாக்கம்.. பல திரைப்பட தயாரிப்பாளர்களின் வெற்றியையும், புகழையும், தோல்விகளையும் கண்டது. இந்த நகரம்தான் படத்தின் கதைக்கள பின்னணி.
படத்தின் இரண்டாம் பாதியில் நிவின்பாலி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு உயிர்ப்புள்ள நடிப்பை வழங்குவதை காண்கிறோம். ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் நிவின் பாலியின் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்திருக்கிறது. ஒரு சூப்பர் ஸ்டாராகவும், சிறந்த நடிகராகவும் அவர், தனது கதாபாத்திரத்தின் சாரத்தை சிரமமின்றி உட்கிரகித்து ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு வெளிப்பாட்டையும் உணர்வுபூர்வமாகவும், உய்த்துணர்வாகவும் வழங்கி, பார்வையாளர்களை மயக்கி அவர்களை.. அவரது பயணத்துடன் இணைத்துக்கொள்கிறார்.
‘வர்ஷங்களுக்கு சேஷம்’ படத்தில் நிவின் பாலியை வேறுபடுத்தி காட்டுவது நுணுக்கம் மற்றும் நுட்பத்துடன் கூடிய எண்ணற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்… முப்பது நிமிடங்களுக்கும் குறைவான திரை தோன்றலில் நிவின்பாலி பார்வையாளர்களை எளிதாக கவர்கிறார். பச்சாதாபம் மற்றும் புரிதல் உணர்வுடன் பார்வையாளர்களை தனது கதாபாத்திரத்திற்குள் உள்ளிழுத்து விடுகிறார். அவர் அந்த கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மைகளையும், சூழல்களையும் அனாயசமான நடிப்பால் எளிதில் கடந்து செல்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பாதிப்பு மற்றும் அதன் வலிமையை சம அளவில் வெளிப்படுத்துகிறார். இது பல ஆண்டுகளாக கொண்டாடப்படுவதற்கும், போற்றப்படுவதற்கும், நினைவு கூறப்படுவதற்கும் தகுதியான ஒரு நடிப்பாகத் திகழ்கிறது.

நிவின் பாலியின் அட்டகாசமான நடிப்புக்கு கூடுதலாக ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ வலிமையான மற்றும் அழுத்தமான கதைகளத்தையும், திறமையான சக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர்கள் ஒரு ஹைடெக்கான சினிமா அனுபவத்தையும் வழங்குகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம்.. ரசிகர்களிடத்தில் நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

Previous Post

ஜெ பேபி திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியானது

Next Post

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது.

Next Post

'ராக்கிங் ஸ்டார்' யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது.

Popular News

  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.