• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

by Tamil2daynews
May 21, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

 

‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தயாரிப்பில், இயக்குநர் சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில், யோகிபாபு,ரமேஷ் திலக் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் வானவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழு தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவக்கியுள்ளது.

யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் இணைந்து நடிக்கும்  மல்டி ஸ்டாரர் திரைப்படமாக வானவன் உருவாகி வருகிறது.

யோகி பாபுவின் நகைச்சுவையுடன் Feel Good, Fantasy ஜானரில், குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் கொண்டாடும் வகையில் அசத்தலான காமெடியுடன்  இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸான மாஸ்குரேட் சீரிஸை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா வெற்றிக்கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள், மதுரை மற்றும் சென்னையின் கிராமப்புறங்களைச் சுற்றி படம்பிடிக்கப்பட்டுள்ளது. EDENFLICKS PRODUCTIONS பேனரின் கீழ் அமெரிக்க தொழிலதிபர் தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் இணைந்து தயாரித்தார் என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Previous Post

பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள ‘ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு

Next Post

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

Next Post

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.