• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

by Tamil2daynews
May 21, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் 29 மே 2024 அன்று வெளியாகிறது!

 

விஜய் ஆண்டனி, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘ரோமியோ’ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி தனது அடுத்த படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை வெளியிட தயாராகி வருகிறார். ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ’10 எண்றதுக்குள்ள’, ‘கோலி சோடா2’ போன்ற படங்களை இயக்கியவரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் ‘மழை பிடிக்காத மனிதன்’ (MPM) படத்தை அதிக பட்ஜெட்டில் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி, ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ ‘டாலி’ தனஞ்ஜெயா, மேகா ஆகாஷ், முரளி ஷர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், ‘தலைவாசல்’ விஜய், ஏ.எல். அழகப்பன், ‘திருமலை’ படப்புகழ் இயக்குநர் ரமணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘

‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் ஒரு சிறப்பான, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம், சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார் என்பதுதான் கதை. படம் அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

‘கோடியில் ஒருவன்’, ‘கொலை’, ‘ரத்தம்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கருப்பொருள், உருவாக்கம் மற்றும் நடிகர்களின் திறமையாம நடிப்பிற்காக பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் இந்தத் திரைப்படம் ஈர்க்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் ‘கவிதைத் தனத்துடன் ஆக்‌ஷன் என்டர்டெய்னர்’ என்ற புதிய வகையை (Genre) முன்வைக்கிறது. ஏனெனில், இது வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படமாக இருக்காது. ஆனால், சமூகம் தாழ்த்தப்பட்டவர்களை எப்படி நடத்துகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் பாத்திரத்தைப் பற்றிய பின்னணியில் வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாக படம் இருக்கும். படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், திரையரங்குகளில் வெளியாகும். அதற்கு முன்பாக மே 29, 2024 அன்று டீசரை வெளியிட்டு படத்தின் புரோமோஷனை படக்குழு தொடங்கியுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பிற்கு ‘டூஃபான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் வெளியிடப்படும்.

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு: விஜய் மில்டன்,
இசை: அச்சு ராஜாமணி – விஜய் ஆண்டனி,
எடிட்டர்: பிரவீன் கே.எல்.,
கலை இயக்குநர்: ஆறுமுகசாமி,
ஸ்டண்ட்: ‘சுப்ரீம்’ சுந்தர்,
உடைகள்: ஷிமோனா ஸ்டாலின்,
டிசைனர்ஸ்: தண்டோரா-சந்துரு,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர் – டி’ஒன்.

Previous Post

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது !!

Next Post

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன் – வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

Next Post

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன் - வெல்கம் பேக் ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

Popular News

  • நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • இளையராஜாவின் இசையில், “மியூசிக் ஸ்கூல்” படத்திலிருந்து, ஸ்ரேயா சரண் மற்றும் ஷர்மன் ஜோஷியின் நடிப்பில், புத்துணர்ச்சியூட்டும் ரொமாண்டிக் பாடல் “ஏனோ என் பாடல் இசைத் தேடுதே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜான்சி” இணையத் தொடர் இரண்டாவது சீசன் வெளியீடு பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • புது வீடு வாங்க விமல் படும் கஷ்டங்கள்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.