• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

by Tamil2daynews
May 26, 2024
in சினிமா செய்திகள்
0
நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.

 

கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இன்னொரு மிகமுக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி,
ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர்ஹிட்டான  #96 படத்தை டைரக்ட் செய்த ச. பிரேம் குமார் டைரக்ட் செய்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.96 படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீண்டும் டைரக்டர் ச. பிரேம்குமாருடன் இப்படம் மூலம் கைகோர்க்கிறார்.

இதன் படபிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்தது.எடிட்டிங், டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது.

இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்.” என்று கூறினார்.

தயாரிப்பு: ஜோதிகா மற்றும் சூர்யா
இணை தயாரிப்பு: ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன்
ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு,
எடிட்டிங்: ஆர்.கோவிந்தராஜ்,
புரொடக்‌ஷன் டிசைனர்: ராஜீவன்,
பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி,
மேக்கப்: வி.முருகன்,
VX: எஸ்.அழகிய கூத்தன்- சுரேன்.ஜி,
VFX: பாந்தம் ஸ்டுடியோஸ்,
DI: ஐஜின்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்.K.S,
Sync Sound: ராகவ் ரமேஷ்,
ஸ்டில்ஸ்: ஆகாஷ்,
Pro: ஜான்சன்.
Previous Post

ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் – ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.

Next Post

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Next Post

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

Popular News

  • ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • டி சி (DC) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்‌ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!

August 10, 2026

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

August 10, 2026

மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”

August 10, 2026

ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்

August 10, 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

August 10, 2026

டி சி (DC) – விமர்சனம்

August 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.