• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது

by Tamil2daynews
November 2, 2019
in சினிமா செய்திகள்
0
சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்கப்படும் என, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு, நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும் எனவும், 26 இந்திய திரைப்படங்கள் மற்றும் 15 இந்திய ஆவணப்படங்கள் திரையிடப்படும் எனவும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

‘பதாய் ஹோ’, ‘கல்லி பாய்’, ‘உரி’ போன்ற பாலிவுட் திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. மேலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 12 வெவ்வேறு மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு இத்திரைப்பட விழாவில் , ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரகாஷ் ஜவடேகர் இன்று (நவ.2) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ ( ICON OF GOLDEN JUBILEE) என்ற விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. இதனை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தனக்கு விருது வழங்கப்படுவதற்கு ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினி தன் ட்விட்டர் பக்கத்தில், “சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவில் எனக்கு வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க மரியாதைக்கு இந்திய அரசுக்கு நன்றி,” என பதிவிட்டுள்ளார்.

Tags: RajinikanthSuperstar
Previous Post

28 வருடங்களுக்கு பிறகு ராஜ்கிரண் – மீனா இணைந்து நடிக்கும் ‘குபேரன்’..!  

Next Post

சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! – ஆ.பிரியதர்ஷினி.

Next Post
சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! – ஆ.பிரியதர்ஷினி.

சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! - ஆ.பிரியதர்ஷினி.

Popular News

  • ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

    0 shares
    Share 0 Tweet 0
  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கிறிஸ்டினா கதிர் வேலன்’ திரைப்பட இயக்குனரின் புதிய படம்: “ஸ்கார்” (SCAR)

    0 shares
    Share 0 Tweet 0
  • “விஸ்வநாத் & சன்ஸ்” முதல் சிங்கிள் “பட்டாம்பூச்சி” இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026

கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா

July 23, 2026

டாக்ஸிக்’-Toxic திரைப்படத்தின் ‘தடுமாறுதே ‘ பாடல் மூலம் ராயா மற்றும் ரெபெக்கா கதாபாத்திரத்தின் புதிய பரிமாணத்தை ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் மற்றும் தாரா சுதாரியா வெளிப்படுத்துகின்றனர்.

July 23, 2026

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

July 23, 2026

காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி

July 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.