• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!

by Tamil2daynews
July 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!

 

கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான்-இந்திய படங்கள் வந்த போதிலும் ‘மகாராஜா’ திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகள் மற்றும் தமிழ் பேசாத பிரதேசங்களில் இருந்தும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது,
“இது வணிகரீதியாக கிடைத்த வெற்றி என்பதையும் தாண்டி, தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வரவேற்கவும் பாராட்டவும் திரைப்பட ஆர்வலர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ‘மகாராஜா’ கொடுத்துள்ளது.  ‘மகாராஜா’ திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தபோது, இது பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று நம்பினோம். ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், கமர்ஷியல் ரீதியாகவும் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமா நிறைய வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில், ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்திருப்பது எங்களுக்கு பெருமை. படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ’மகாராஜா’. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

Previous Post

ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ், ஆல்ஃபா படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகை அலியா பட்!

Next Post

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.