• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக, அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!

by Tamil2daynews
July 21, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நானியின் “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக,  அசத்தலான கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது !!

 

நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம்,   “சூர்யா’ஸ் சாட்டர்டே”   படத்திலிருந்து,  SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !!

நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை  கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர்   வெளியிட்டுள்ளனர்.

வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி  வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த  வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான் கிருஷ்ணர் (நானி), தனது சத்யபாமாவுடன் (பிரியங்கா மோகன்), ராவணாசுரனை (SJ சூர்யா) எதிர்கொள்கிறார்.
Imageஆரம்பம் முதல் இறுதி வரை,  பரபர பதட்டத்துடன், வீடியோ ரசிகர்களை முழுவதுமாக கவர்ந்திழுக்கிறது. இது உண்மையில் இரண்டு சக்திவாய்ந்த நபர்களுக்கு இடையிலான போரை காட்டுகிறது. SJ சூர்யா மிரட்டலாக பயமுறுத்தும் அதே நேரத்தில், நானி தனது வலுவான திரைப் ஆளுமையால் பிரமாதப்படுத்துகிறார். இருவரும் தங்கள் ஆற்றல்மிகு நடிப்பால் தீப்பிடிக்க வைக்கிறார்கள்.

விவேக் ஆத்ரேயாவின் தனித்துவமான கதை சொல்லல் நம்மை அசத்துகிறது.  நாட் எ டீஸர் எனும் இந்த வீடியோ சொல்லும் கதை மிக சுவாரஸ்யமாக உள்ளது. முரளி ஜியின் ஒளிப்பதிவு கண்களை கொள்ளை கொள்கிறது, அதேசமயம் ஜேக்ஸ் பெஜாய் தனது அழுத்தமான இசைக்கோர்வையில் காட்சிகளை அழகுபடுத்துகிறார். DVV என்டர்டெயின்மென்ட்டின் தயாரிப்பு பிரம்மாண்டத்தின் உச்சமாக அமைந்துள்ளது.

நாட் எ டீஸர் எனும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ,  வெகுஜன மக்களை ஈர்க்கும் மாஸ் தன்மையுடன் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் உண்மையான ஆடுபுலி ஆட்டத்தை காண, ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

இந்த பான் இந்தியா ஆக்சன் அதிரடி-சாகச திரைப்படத்திற்கு கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: நானி, பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே. சூர்யா, சாய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து- இயக்கம் : விவேக் ஆத்ரேயா தயாரிப்பாளர்கள்: DVV தனய்யா, கல்யாண் தாசரி
பேனர்: டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : முரளி ஜி
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீநிவாஸ்
சண்டைப்பயிற்சி : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : வால்ஸ் அண்ட் டிரெண்ட்ஸ்

Previous Post

டீன்ஸ் நன்றி அறிவிப்பு விழாவில் குழந்தைகளுக்கு பார்த்திபன் அன்பு முத்தமழை

Next Post

காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம் ” EMI மாத்தவணை “

Next Post

காமெடி, சென்டிமெண்ட் கலந்த படம் " EMI மாத்தவணை "

Popular News

  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.